தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி. லெப். கேணல் கங்கையமரன்

breaking
கடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள் இன்றாகும்.! 29.06.2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ‘கடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன், மேஜர் தசரதன் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   கடற்புலிகளின் தொடக்க காலம் முதல் கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப். கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பதும் விடுதலைப் போராட்டத்திற்கு அயராது உழைத்து கடற்புலிகளின் வளர்ர்ச்சிக்கும் பெரிதும் உர்ய்துனையாக திகழ்ந்தவர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி. பின்னைய நாட்களில் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையில் பல கலங்களை தாக்கி பல சாதனைகளை அதன் தலைநகரிலும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.