மக்களிற்கென சேகரிக்கப்பட்ட நிதியை பதுக்கிய மாவை, ஆனோல்ட், துரைராஜசிங்கம்

breaking
  தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு கனடாவில் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்து தென்னமரவாடி கிராமத்திற்காக நிதி சேகரித்து விட்டு நாடு திரும்பியுள்ளார்கள். இன்னிலையில் இன்றும் தென்னமரவாடி கிராம மக்கள் எதுவித அபிவிருத்தியும் அற்ற நிலையில் அநாதைகளாக விடப்பட்டுள்ளார்கள். இந்த மக்களின் பெயர் சொல்லி சேர்க்கப்பட்ட நிதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால் சேகரிக்கப்பட்ட நிதிகள் எங்கே? வடக்கு கிழக்கின் எல்லை கிராமமான தென்னமரவாடி கிராமத்தினை பலப்படுத்த வேண்டும் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்களை பலப்படுத்தி மக்களை குடியேற்றி வேலைவாய்ப்பினை கொடுக்கவேண்டும் என்று பல கோடி கணக்கில் நிதி சேகரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் தென்னமரவாடி மக்களுக்கு இன்று வரை உதவி மேற்கொள்ளப்படவில்லை. திருகோணமலையில் உள்ள இரா.சம்மந்தன் அவர்களால் தென்னைமரவாடி அபிவிருத்தி சங்க கட்டம் மாத்திரம்தான் திறந்து வைக்கப்பட்டதே தவிர வேறு இந்த உதவியும் மேற்கொள்ளப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட எல்லை கிராமத்தின் பெயரினை சொல்லி சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது ?என தற்போது (தேர்தல் காரணமாக) மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் …. மற்றும் அவ்வாறாயின் குறித்த நிதி எங்கே? அந் நிதியை யார் கையாண்டார்கள்? குறித்த நிதி மோசடி செய்யப்பட்டுவிட்டதா? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.