ஆழப்படுத்த கிணற்றுக்குள் இறங்கிய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்

breaking
  முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு 1ம் வட்டாரத்தில் கிணறு ஆழப்படுத்துவதற்காக கிணற்றில் இறங்கிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். கடும் வறட்சி காரணமாக மக்களின் கிணறுகளில் நீர் வற்றி காணப்படுகின்றது குறித்த பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றினை ஆழப்படுத்துவதற்காக இன்று காலை கிணற்றுக்குள் இறங்கிய இருவர் விஷவாயு தாக்கி மயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது புதுக்குடியிருப்பு 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த செ.திலகச்செல்வன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 24 அகவையுடைய ஆ.றதுர்யன் என்ற இளைஞன் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் வறட்சி காரணமாக நேசன் குடியிருப்பு பகுதி மக்களின் கிணறுகள் வற்றிகாணப்படுகின்றன இன்னிலையில் கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதக்கா மேலும் ஆழப்படுத்த முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது... இதன்போது கிணற்றில் இறங்கியவர்கள் மயக்கம் அடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கிணற்றிற்குள் வேப்பம் இலைகள் கட்டி இறக்கப்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுளது மற்றையவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.