Take a fresh look at your lifestyle.

பாராட்டு மழையில் நனையும் பிரான்ஸ்  தேர்தலில் வெற்றி பெற்ற பிரபாகரன் பிறேமி

 

பிரான்ஸில் தமிழ் யுவதி ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்அங்கு இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார்.

பொண்டி மாநகரசபைத் தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

இதேவேளை இம் முறை பிரான்ஸில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தல்களில் Ile de France பிராந்தியத்தில் பல இடங்களில் பல தமிழர்கள் மாநகரசபை உறுப்பினர் பதவிகளுக்காக களம் இறங்கி இருந்தனர். இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தில் எமது இளைய தலைமுறையினர் எம் தேசியத்தின் பாதைக்கு உரமுட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர்.

%d bloggers like this: