ஆடுகளிற்கு கொரொனா...!: தனிமைப்படுத்தப்பட்ட 50 ஆடுகள்

breaking
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் வளர்த்துவரும் 50க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதால் அவைகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என ஊர் மக்கள் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து பரிசோதனை செய்தனர். அப்போது சில ஆடுகளுக்கு பிபிஆர் எனப்படும் ஆடு பிளேக் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு, நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை கொரோனா வைரஸ் தாக்காது என்று கூறிவந்தது. பின்னர் சமீபத்தில் அந்த அமைப்பு தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இருப்பினும், தற்போது வரை செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறிவருகின்றனர்.