பேரினவாத சக்திகள் தமிழ் முகம்களில் வலம் வந்து வாக்குகேட்கின்றார்கள்

breaking
இன்று மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்கு பேரினவாத சக்திகள் வந்து நிக்கின்றார்கள் இந்த மண்ணில் புத்த விகாரையினை கட்டுவதற்கும் சிங்ககுடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இராணுவ மயமாக்கலை ஏற்படுத்துவதற்கு தமிழ் முகம் களில் வந்து நிக்கின்றார்கள் பேரினவாதத்திற்கு விலைபோன கட்சிகளாக.. மக்கள் தெளிவாக சிந்தியுங்கள் என்று தமிழ்தோசிய மக்கள் முன்னணியின் வன்னிமாவட்ட தேர்தல் தொகுதி வேட்பாளர் எஸ்.தவபாலன்உள்ளிட்ட வேட்பாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள் இதன்போது அவர் கருத்து தெரிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். வன்னிமாவட்ட  வேட்பாளர்களான எஸ்.தவபாலன்,ச.மேரிரெஜீனா,த.நிறஞ்சன் ஆகியோர் மக்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள்.   இதன்போது வேட்பாளர் எஸ்.தவபாலன் மேலும் தெரிவிக்கையில்... ஒரு புதிய மாற்றம் வேணும் என்கின்ற அடிப்படையில் வன்னியில் புதியவர்கள் களம் காண்கின்ற சூழலில் புதிய உத்வேகம் மிக்க துடிப்புள்ள ஆழுமை மிக்க தரப்புக்களை தமிழ் மக்கள் தெரிவு செய்யவேண்டிய கால சூழ் நிலைக்குள் இருக்கின்றார்கள். தமிழ்தேசிய அரசியலை முன் கொண்டு செல்லவேண்டிய தமிழ் தரப்புக்கள் தங்கள் அரசியல் நெறியில் இருந்து விலகி இருக்கின்றது. அரசியல் நிலைத்திருப்பிற்காக அரசியல் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக புதிய தேசியம் சார் தலைமையை உருவாக்கவேண்டிது காலத்தின் கட்டயாம் மக்கள் வாக்களித்து 10 ஆண்டுகள் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் மாற்றத்தினை வேண்டிய அணியாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி என்கின்ற அரசியல் இயக்கம் தனது பயண பாதையில் துடிப்புள்ள இளைஞர்களாக வன்னியில் களம் இறக்கியுள்ளது.   மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும்  வாக்குரிமை என்பது மிகப்பெரிய பலம் உங்கள் வாக்கினை கேட்பவர்களின் கடந்தகால பயணம் எவ்வாறு இருக்கின்றது என்பதை பாருங்கள் இன்று தமிழ்மக்களின் விடையங்களை கதைப்பதற்கானவர்கள் இந்த மண்ணில் இல்லை நாங்கள் தெரிவு செய்துவிட்டவர்கள் இந்த விடயங்களை கதைக்கின்றார்கள். தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு எத்தனையோ வழிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இந்த விடையங்களை பேசுபொருளாக்கி பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் சர்வதேசத்துடனும் பேசுவதற்கானவர்களை நாங்கள் உருவாக்காவில்லை அதனை உருவாக்க வேண்டிய தேவை தற்போது உள்ளது. இளைஞர்களிடம் அரசியலை தாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம் வயது போனவர்களையும்,தொடர்ச்சியாக அரசியலில் இருந்தவர்களுக்கும் மக்கள் வாக்களித்து மக்களின் வாழ்வில் மாற்றம் வரவில்லை 2018 ஆம் ஆண்டு ஊள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி 101 உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்துள்ளார்கள் 85ஆயிரம் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளது இந்த அரசியல் பலத்தில்தான் நாங்கள் தேர்தலில் குதித்துள்ளோம். தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட வீட்டில் இன்று தேசிய தலைவருக்கு மதிப்பில்லை போரின் வலி தெரியாதவர்கள் இன்று வீட்டில் இருந்து கொண்டு தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தினை கொச்சைப்படுத்துகின்றார்கள். இவ்வாறு தரகு அரசியல் செய்பவர்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் காலம் காலமாக ஏமாற்றி வருபவர்களை அகற்ற வேண்டும் இன்று எங்கள் காணிகளையே நாங்கள் பாதுகாக்கவேண்டி நிலைக்கு தமிழ்தேசியத்தின் தலைமைகள் தமிழ்மக்களை கொண்டுவந்து விட்டுள்ளார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களை பாதுகாக்கவில்லை அரசாங்கத்தினை பாதுகாப்பதற்காக கையினை உயர்த்தினார்கள் வன்னியில் மக்களின் அபிவிருத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை ஆனால் பாதுகாப்பு செலவீனத்திற்காக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்த அன்றைய அரசாங்கத்தினை கண்மூடித்தனமாக ஆரவு தெரிவித்தார்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகள். சுமந்திரன் அவர்கள் ஒரு சட்டத்தரணி சட்டபுலமைவாய்ந்தவர் ஆனால் அவரின் சட்டப்புலமை தன்னை ஆதரிக்கும் மக்களுக்கும் தன் இனத்திற்கும் பயன்படவில்லை அது சிங்களவர்களுக்த்தான் பயன்படுகின்றது அது எங்களுக்கு தேவையில்லை தமிழ் மக்களின் இவ்வாறான நிலை தொடர்ந்து சென்றால் இன்னும் ஜந்து ஆண்டுகளில் தமிழர்களின் நிலம் என்றுசொல்லும் அளவிற்கு எதுவும் இல்லாமல் போய்விடலாம் தமிழர்களின் மண்ணில் சமூக கட்டமைப்புக்களை உடைத்து குடியேற்றங்களை நிறுவி தமிழ் தேசம் என்று அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு பெரும்பான்மையின் சக்த்திகள் நகர்த்தி வருகின்றார்கள் அதன் பின்னர் எங்களுக்கு அரசியல் உரிமை இந்து என்ன இல்லாமல் விட்டு என்ன இந்தளவு நிலைக்கு தமிழ்தேசிய தலைமைகள் கொண்டுவந்து விட்டுள்ளார்கள்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.