காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குகிறோம்: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் டக்ளசின் கருத்து

breaking
  சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடியுள்ளார். இதன்போது வடபகுதியைச் சேர்ந்த ஊடகங்களின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் விசேடமாக கலந்து கொண்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றினார். குறித்த சந்திப்பில் கேட்க்கப்பட்ட கேள்வியொன்று வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தங்கள் கருத்தென்ன ? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் , காணாமல் போனவர்கள் மீண்டும் வரவில்லை என்றாலோ உலகின் எந்தப் பகுதியிலும் அவர்கள் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே அர்த்தம் என்றும் கூறினார். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதில் நாம் முன்னுரிமை வழங்குகின்றோம். குறிப்பாக வீடமைப்புத் திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றன என்றார். 10 வருடங்கள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியை வழங்காது ஏமாற்றி வரும் பேரினவாத சிங்கள அரசாங்கத்திற்கு விளக்குப் பிடிக்கும் வேலையை செய்து வரும் டக்ளசின் கதை காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை மேலும் வேதனைக்குள் தள்ளும் செயல் என்பதுடன் டக்ளசின் ஒட்டுக் குழுவாலும் பல நூறு தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது