சிங்கள விசுவாசத்தை வெளிப்படையாக காட்டும் சிறீதரன் மக்களே அவதானம்!

breaking
சிறிலங்காவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் அவர்கள் தேர்தல் தொடங்கிய காலத்தில் இருந்து மிகமோசமாக உளறித்தள்ளி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுமந்திரன் என்கின்ற சிங்கள அடிவருடியை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கள் அவர்களுடன் ஒப்பிட்டதிலிருந்தே தனது சிங்கள விசுவாசத்தை வெளிப்படையாக காட்டியிருந்தார் சுமந்திரன். இந்த நிலையில் தான் சிறீதரன் மீண்டும் தான் ஒரே நாளில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை ஒரு ஊடகத்திற்கு வழங்கியிருக்கிறார். போரின் இறுதிக்காலத்தில் வவுனியாவில் சென்று பதுங்கிக்கொண்ட சிறீதரன் போர்ஓய்வின் பின்னர் மக்களிடையே உணர்ச்சிவசமாக பேசி கடந்த காலங்களில் தேர்தல்களில் வென்று சிங்கள அரசு போடும் எலும்புத்துண்டுக்கு மறைமுகமாக உழைத்து வந்திருந்தார் என்பதை மக்கள் அறிவார். அந்த நிலையில் இம்முறை நேரடியாக சிங்கள அடிவருடித்தனத்தை காட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியிருக்கும் சிறீதரன் போன்ற புல்லுருவிகளுக்கு. தமிழ் மக்கள் மிகத்தெளிவான பாடத்தை புகட்ட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது.