சிறிதரன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கிறார்?

breaking

இலங்கையில் வரப் போகும் பொதுத் தேர்தலில், யாழ் - கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர், சிவஞனாம் சிறிதரன் அவர்கள், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்க வாய்ப்பிருக்கின்றது !

விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA), கடந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாரிய வெற்றி பெற்ற 22 பாராளுமன்ற உறுப்பினர்களும், கள்ள வாக்குகள் மூலம் தான் தெரிவு செய்யப்பட்டதாகவும், அந்தக் காலப்பகுதியில் தான் ஒரு அரசாங்கப் பள்ளி ஆசிரியராக இருந்தும், தானே 75 கள்ள வாக்குகள் போட்டதாகவும், தற்பொழுது அவர் சுய நினைவில் எந்தவொரு அழுத்தமுமில்லாமல், ஊடகத்திற்கு கொடுத்த ஒளிப்பதிவு பேட்டியை, அவரின் சொந்த வாக்கு மூலமாகவெடுத்து, தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக, தேர்தல் ஆணையத்திடம் பலர் முறைப்பாடு செய்ய வாய்ப்பிருக்கின்றது !

பொதுவாக ஜனநாயக நாட்டின் குடிமகனுக்கு 1 வாக்குரிமை மட்டும் இருக்கும் பட்சத்தில், சிறிதரன் அவர்கள் எப்படி 75 கள்ள வாக்கை போட்ட பிறகு, கடந்த 2 முறை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, இலங்கை அரசியல் சாசனப்படி சத்தியப்பிரமாணமும் செய்து, இந்த முறை எப்படி தேர்தலில் போட்டியிட முடியுமென்று, சாதாரண பாமரனும் தேர்தல் ஆணையிடம் கேள்வி எழுப்ப முடியும் :)

அப்போதைய 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் எல்லோரும், கள்ள வாக்குகளால் தான் வெற்றி பெற்றார்களென்று, சிறிதரனின் பேச்சிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள் ?

அன்று சம்மந்தர் ஐயா, மாவை அவர்களின் தலைமையில் வெற்றி பெற்ற 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும், சிறிதரன் அவமானப்படுத்தியுள்ளாரா ? இதற்கு, தமிழரசுக் கட்சியின் மேல் நிலைக் குழு, சிறிதரன் மேல் ஒழுங்காற்று நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கோமணத்தோடு திரிவார்களா?

இவ் விடையத்தில், சிறிதரன் அவர்களின் பேச்சு, விடுதலைப் புலிகள் அமைப்பையும் படு மோசமாக அவமானப்படுத்தியுள்ளதாக 100% உணர முடிகின்றது !

தமிழ் இனதிற்காக போராடிய விடுதலைப் புலிகளை, அவமானப்படுத்திய சிவஞனாம் சிறிதரன் ஒருவேளை போட்டியிட்டால், மானமுள்ள யாழ் - கிளிநொச்சி மக்கள் இவரை முழுமையாக புறக்கணிப்பார்கள்.

மக்களின் நண்பன், பராசுரன்(கனடா)