வரலாறு தெரியவில்லை 115 சிறுவர்கள் உடல் இருக்கும் பெரும் புதை குழி கண்டுபிடிப்பு

breaking
115 சிறுவர்கள் புதைக்கப்பட்ட புதை குழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது 500 வருட பழமை வய்ந்தது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் வரலாறு என்னவென்று தெரியவில்லை. இது குறித்து எதிலும் எழுதப்பட்டும் இல்லை. அப்படி இருக்கையில் இது எவ்வாறு நடந்தது என்று போலந்து நாட்டில் உள்ள மக்கள் குழப்பிப் போய் உள்ளார்கள். போலந்து நாட்டில் ஒரு கட்டடம் கட்ட நிலத்தை தோண்டிய வேளை மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கே ஆராட்சி பணிகள் தொடங்கியது. சுமார் 115 சிறுவர்கள் இங்கே புதைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது சவக்காலை அல்ல. ஒரே வயதை ஒத்த சிறுவர்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு வரலாறும் இல்லை என்பது மிகவும் சந்தேகமான விடையம்.