கோத்தாவின் தேர்தல் நாடகம்:   சிறப்பு நடிகர் டக்ளஸ் தேவானந்தா

breaking
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவர் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தாயகப்பகுதியான மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்களை சிங்களவர்களின் பராம்பரிய இடமாக நிறுவுவதற்காகவே இராணுவத்தினரையும் பேரினவாத பிக்குகளையும் கொண்டதாக செயலணி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரவிருப்பதால் குறித்த முடிவினால் தமிழ் மக்களின் வாக்குகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் தமிழ் கட்சிகளிற்கு கிடைக்காமல் போகவுள்ளது. எனவேதான் தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்கான் ஒரு கண்துடைப்பு நடவடிக்கைக்காகவே இருவர் செயலணியில் உள்வாங்கப்படவுள்ளனர்.