முகக் கவசம் அணிவேன்: நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்

breaking
  கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணிவதற்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார். மக்களுடன் நெருக்கமாக இருக்கும்போது தான் முகக்கவசம் அணியவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தான் முகக்கவசம் அணியப்போதில்லை என ட்ரம்ப் கூறிவந்தார். எனினும், அவர் முகக்கவசம் அணிய வேண்டும் என அவரின் குடியரசுக் கட்சித் தலைவர் ஒருவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், முகக்கவசம் அணிவதை தான் ஆதரிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். ஏற்கெனவே தான் முகக்கவசம் அணிந்திருப்பதை பலர் கண்டுள்ளனர் எனவும், மக்களுடன் நெருக்கமாக இருக்கும்போது தான் முகக்கவசம் அணியவுள்ளதாகம் அவர் தெரிவித்துள்ளார். ஆமெரிக்காவில் ஒரே நாளில் 52,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இதுவரை 27 இலட்சம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன். 128,000 பேர் உயிரிழந்துள்ளனர்