மூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்

breaking
எகிப்தில் விமான நிலையங்கள், அருங்காட்சியகம் மற்றும் கெய்ரோவில் புகழ்பெற்ற கிசா பிரமிடுகள் ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் (கொவிட்-10) முடக்கநிலையால் மூடப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்கும் பிறகு தற்போது இவை திறக்கப்பட்டுள்ளன. நேற்று (புதன்கிழமை) கெய்ரோவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 14 சர்வதேச விமானங்களில் இருந்து 2,000 பயணிகள் புறப்பட்டதாக, தேசிய விமான சேவையான எகிப்து எயார் நிறுவனம், தெரிவித்துள்ளது. 350 இற்க்கும் மேற்பட்ட உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் ஹூர்காடாவின் செங்கடல் ரிசார்ட்டிலும், சினாய் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஷார்ம் எல் ஷேக்கின் முக்கிய ரிசார்ட் மற்றும் கடற்கரை இடத்திலும் தரையிறங்கின. எகிப்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.