ரஷ்ய ஜனாதிபதி 2036 வரை பதவி வகிக்க மக்கள் ஆதரவு

breaking
  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை (Vladimir Putin) 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் வகையிலான அரசியலமைப்பு திருத்தம், நாட்டு மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் இதுவரை 87 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அவற்றில் 77 வீத வாக்குகள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் விளாடிமிர் புட்டின் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.