வெடிபொருட்களுடன் படகொன்று பறிமுதல்

breaking
கடந்த முதலாம் திகதி  தென்   தமிழீழம் , திருகோணமலை, எரக்கண்டி கடற்கரை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்தல் மூலம் மீன் மற்றும் கடல் வளங்களை அழிப்பதைத் தடுக்க சிறிலங்கா  கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற மற்றொரு நடவடிக்கை 2020 ஜூன் 01 ஆம் திகதி திருகோணமலை, எரக்கண்டி கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள போது ஒரு டிங்கி படகு அருகில் இருந்து அவசரமாக நிலத்தை அடைந்த நபரை கடற்படை கண்டறிந்தது. இதனையடுத்து, கடற்படைப் பணியாளர்கள் சந்தேகத்தின் பேரில் குறித்த டிங்கி படகை சோதனை செய்தனர். அப்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப்பட்ட 03 சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதுக்காக ஆறு (06) வாட்டர் ஜெல் குச்சிகள், 03 பாதுகாப்பு உருகி மற்றும் 03 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த டிங்கி படகு, வெடிபொருட்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன. கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்ட டிங்கி படகு, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் மற்றும் மீன்பிடி பொருட்கள் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா  கடற்படை தெரிவித்துள்ளது.