கொவிட்-19: இங்கிலாந்து- வேல்ஸில் பராமரிப்பு இல்லங்களில் 29,000பேர் உயிரிழப்பு!

breaking
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நெருக்கடியினால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் மேலும் 29,000பேர் உயிரிழந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டிலேயே இறந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து குடியிருப்பாளர்களின் இறப்புகளையும் உள்ளடக்கி, தேசிய புள்ளிவிபர அலுவலகம் (ஓஎன்எஸ்) புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. இதில், பராமரிப்பு இல்லவாசிகளில் கால் பகுதியினர் மருத்துவமனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக, அதாவது 19,394பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்ததாக, அவர்களின் இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10,000பேர் பிற காரணங்களுக்காக உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லங்களில் ஆண்களின் மரணத்திற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் ஆகும். இது இறப்புகளில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும், பெண்களின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணியாக கொரோனா வைரஸ் உள்ளது. முதுமை மற்றும் அல்சைமர் நோய்க்குப் பிறகு, இது கால்வாசி இறப்புகளுக்கு காரணமாக உள்ளது. ஜூன் 12ஆம் திகதி வரையிலான வாரம், மார்ச் மாத ஆரம்பத்தில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் புள்ளிவிபரங்களை விடக் குறைந்தது.