உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்வு

breaking
சீனாவின் உகான் நகரில்  கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது  உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் கொரோனாவின் தாக்கத்துக்கு தப்பவில்லை. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் 2-வது அலை எப்போது ஏற்படுமோ? என்ற அச்சம் நீங்கியபாடில்லை. உலக மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது கோரமுகத்தை காட்டிக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி  உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,182,576  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  528,409 ஆக கூடியுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,292,523- ஆக உள்ளது. உலக அளவில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்காதான் உள்ளது. அமெரிக்காவில் மட்டும்   2,890,588- பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் பிரேசிலும் (1,543,341),  3-ஆம் இஅடத்தில் ரஷ்யாவும் (667,883) உள்ளன.