மெக்ஸிகோவில் ஒரேநாளில் புதிதாக 6 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

breaking
மெக்ஸிகோவில் நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக 6 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் நாட்டின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 4 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியை விட அதிக பாதிப்புக்கள் கொண்ட நாடாக மெக்ஸிகோ மாறியுள்ளதுடன் உலகளவில் அதிக பாதிப்புக்களை பதிவு செய்த நாடுகளின் பட்டியலில் 9 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. இதேவேளை மேலும் 654 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 843 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெக்ஸிகோ தொற்றைக் கட்டுப்படுத்தியதாக ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் கூறி இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், சமீபத்திய வாரங்களில் பிரேசில் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து உலகளவில் மிக அதிக நாளாந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகி வருகின்றது. மேலும் அங்கு வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதும் சமூக நடவடிக்கைளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் தொற்று மேலும் பரவ வழிவகுக்கும் என்றும் இதனால் அதிகமான பாதிப்பு ஏற்படக்கூடிய சத்தியம் காணப்படுவதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.