மட்டக்களப்பிற்குள் இராணுவ பாதுகாப்புடன் நுழைந்த பிக்குகள் கூட்டம்: ஆக்கிரமிப்பிற்கான ஒத்திகை வருகை

breaking
  கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த மதம் சார்ந்த பிக்குகள் , இராணுவ அதிகாரி ,வர்த்தகர், மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் இப்படியொரு ஆபத்தான நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்திலுள்ள வேத்துச்சேனை தமிழ்கிராமத்தின் மையானத்தை நோக்கி இன்று வருகை தந்து அங்கு செங்கல் ,கொங்கிறிட் கல் தூண் ஏதும் இருக்கின்றதா அல்லது இரவோடு இரவாக புத்தர் சிலைகள் புதைத்து வைத்தார்களோ எனும் சந்தேகத்தில் வெல்லாவெளி வேத்துசேனையில் கடந்த மாதம் தனியார் காணி யை (விளையாட்டு மைதானம்) அந்த காணி தொல்பொருள் உரிய இடம் யாரும் அங்கு போக கூடாது என்று பொலிஸ் கூறப்பட்ட நிலையில் இன்று பிக்குகள் மற்றும் இராணுவம் சிங்கள அதிகாரிகள் வருகை தந்து இருக்கிறார்கள். உங்கள் அரசியலுக்காக வாக்கு பிச்சை கேட்டு வரும் வாய்பேச்சு அரசியல்வாதிகள், ஊர்தலைவர்களே உடனடியாக வேத்துசேனைக்கு விரைந்து வந்து எமது இருப்பைக் காப்பாற்றுங்கள். வேத்துசேனை மக்கள்