வவுனியாவில் கைகலப்பிற்கு சென்ற அரசியல் நிகழ்வு: தலையை சொறிந்த நெறியாளர்

breaking
  தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ். சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் குழப்பகரமான நிலை ஏற்பட்டபோதிலும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் சிவில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஆரம்பத்தில் நெறியாள்கை செய்த வி. எஸ். சிவகரன் சிவில் பிரதிநிதிகளாக கலந்துகொண்டுள்ள சின்மயா மிசன் சுவாமி தவத்திரு வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவன் வி. சாரங்கன், சமூக ஆர்வலர் செ. சுதாகரன் ஆகியோரும் வேட்பாளர்களாக கலந்துகொண்ட காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ப. உதயராசா, சிவ. கஜேந்திரகுமார் ஆகியோர் மாத்திரமே கருத:துக்களை முன்வைப்பார்கள் என தெரிவித்திருந்தார். இதன்போது கருத்துக்களை முன்வைக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது சிவகரனால் இடையிடையே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பினரும் உரையாற்றி இறுதியில் காதர் மஸ்தான் உரையாற்றி முடிந்தபோது சிவகரனால் கே;ளவிகள் கேட்கப்பட்ட பின்னர் பார்வையாளர்களாக இருந்தவர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மஸ்தானை நோக்கி கேள்விகளை கேட்டார். மக்கள் கேள்வி கெட்பதற்கு அனுமதி இல்லை என தெரிவித்திருந்த நெறியாளர் இதன் போது அமைதியாக இருந்து அவருக்கு அனுமதி அளித்திருந்தார். குறித்த நபர் மஸ்தானை நோக்கி இரு காணாமல் போனோர் விடயம் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கேள்விகளை கேட்டபோது மஸ்தான் அதற்கு பதிலளித்திருந்தர்ர். அடுத்து ஒரு முஸ்லீமாவது தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் இனவாதம் பற்றி பேச்சே வராது என தெரிவித்து தனது கேள்வியை தொடர முட்பட்டபோது காதர் மஸ்தானுடன் வந்தவர்கள் இனவாத கருத்தை முன்வைக்கின்றனர் என நெறியாளரிடம் தமது முறைப்பாட்டை முன்வைத்தார்கள். இதன்போது மேலும் சிலர் மஸ்தானை நோக்கி கேள்வி எழுப்பியபோது நெறியாளர் அனைவரையும் அமைதி காக்குமாறு தெரிவித்தாலும் குழப்பம் அதிகரித்து எவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன்போது காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் சிறிடெலோ கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்படும் நிலை உருவாகியதுடன் சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் மஸ்தானின் ஆதரவாளர்களை நோக்கி கைகளை உயர்த்தியவாறு சென்றிருந்ததுடன் அங்கிருந்த மேலும் இருவருக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டபோது நெறியாளராக செயற்பட்ட சிவகரன் இருவரையும் கைகலப்பில் ஈடுபடாதவகையில் செயற்பட்டு பிரச்சனையை சுமூகமாக்கியிருந்தார். இந்நிலையில் காதர் மஸ்தான் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி சென்றபோது சிலர் கூச்சலிட்டதுடன் நிகழ்வை முழுமையாக குழப்ப முற்பட்டனர். இறுதியில் சிவகரன் செய்வதறியாது நிகழ்வை முடித்து வைத்திருந்தார்.