சுவிஸ் பயணிகள் வானூர்திச்சேவை கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அறிவித்துள்ளது.

breaking
கடந்த வாரம் முகக்கவசம் கட்டாயம் அணியத்தேவையில்லை எனக்கூறியிருந்த சுவிஸ் பயணிகள் வானூர்திச்சேவை திங்கள், யூலை 6 தொடக்கம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவித்துள்ளது. இதனூடாக சுவிஸ் வானூர்திச்சேவையும் பொதுப்போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சுவிஸ் கூட்டாட்சியின் அறிவுறுத்தலின் கீழ் செயற்படுகின்றது. எனினும் இடைவெளி பேணக்கூடியவாறு, எடுத்துக்காட்டிற்கு வானூர்தியில் கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காடு பயணிகள் இருக்கும் வேளையில் முகக்கவசம் கட்டாயம் அணியத்தேவையில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். Translated by Nithurshana Raveendran Source: 20min