நாடாளுமன்ற தேர்தலில் ஆவா குழுவோடு அங்கஜன்

breaking
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஆவா குழு உறுப்பினர் ஒருவரும் போட்டியிடுகின்றார் என்ற அதிர்ச்சி செய்தியை அந்த உறுப்பினரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். ஊடகவியலாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அருண் சித்தார்த் என்ற மேற்படிநபர்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கஜன் இராமநாதனின் அணியுடன் இணைந்து போட்டியிடுகின்றார். தமிழர்களைப் பிரித்தாளும் நோக்குடன் தமிழ் சமூகத்தை எப்போதும் ஒரு கொதி நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் தமிழ் இளைஞர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாவோ உரிமை சார்ந்து சிந்திக்கக் கூடாது என்பதற்காகவும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு பல திட்ட்ங்களை தமிழர் தாயகத்தில் காலத்திற்கு காலம் அரங்கேற்றியிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக தமிழர் தாயகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் சிறு ஆயுதக் குழுக்களை உருவாக்கி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடத் தூண்டி ஒத்தாசையாக இருந்திருக்கிறது. இவ்வாறான குழுக்களின் உறுப்பினர்கள் சிலருக்குப் புலிகளின் காலத்தில் சாவொறுப்புத் தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக 13-12-2003 அன்று வவுனியாவில் வைத்து சிறிஸ்கந்தராஜா சுஜித்குமார் என்ற 'டபிள் பொக்கட்' குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்படடமையைக் குறிப்பிட முடியும். இவர் அந்தக் குழுவின் தலைவராக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் ஒரு வேதனம் பெறும் உறுப்பினராக இருந்தவாறு செயற்பட்டிருந்தார். வட தமிழீழம் , யாழ். குடாநாட்டில் இதே பாணியில் பல குழுக்களை உருவாக்கியிருக்கிறது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு. அதே பாணியில் படைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்கவினால் உருவாக்கப்பட்டுப் போசிக்கப்பட்ட அமைப்பே 'ஆவா குழு' இதன் உறுப்பினரென தன்னைப் பகிரங்கமாக ஒரு  ஊடகத்தின்  நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் அருண் சித்தார்த் என்ற இந்த நபர் தன்னை ஊடகவியலாளர் என்ற மறைப்பில் சிங்கள அடிவருடி அங்கஜன் இராமநாதனின் அணியில் தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டுள்ளார். இவர் அங்கஜனனின் அடியாளாக செயற்படுகின்றார் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இந் நபரே இருக்கிறார். இந்த அணியில் தான், ஒரு சுய கௌரவ பிரஜை எனச் சொல்லி கொள்ளும் சடடத்தரணி ஸ்டனிஸ்லஸ் செலஸ்ரின் போட்டியிடுகிறார். மேற்படி நபருக்கு கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக முன்னர் அங்கஜனின் அடியாளாகவிருந்து தற்போது லண்டனில் சுமந்திரனின் ஊது குழலாக மாறியிருக்கும் முன்னாள் அங்கஜனின் அடியாள் ஒருவரே விசனம் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.