புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளரை மோசமாக நடத்திய காவல்தறை

breaking
  பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ வை இன்று (10) ஊடகவியலாளரொருவர் புகைப்படம் எடுக்க முற்பட்டதையடுத்து அங்கிருந்த அதிகாரியொருவர் அவரை கடுமையாக நடத்தியதுடன் ஊடகவியலாளருக்கு தடை ஏற்படுத்தியுள்ளார். இன்று மாலை வெலிக்கடை சிறை வழக்கில் பிரதிவாதியாக ஆஜர்படுத்தப்படவுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவவை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து குறித்த ஊடகவியலாளர் புகைபடம் எடுக்க முனைந்துள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து ஊடகவியளாளர் தெரிவித்துள்ளதாவது, "நியோமல் ரங்கஜீவ வந்தபோது, நான் சில படங்களை எடுத்தேன் இதனை அவதானித்த குறித்த அதிகாரி, நீங்கள் யார் என்னை புகைப்படம் எடுக்க என்று என்னை இழுத்துச் சென்றார். நான் எனது அடையாளத்தை நிரூபிக்க ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் காட்டினேன். இதனையடுத்து எனது கமெராவிலிருந்த இரண்டு மெமரி கார்ட்டுகளையும் பெலிஸார் பெற்று கொண்டனர் என தெரிவித்துள்ளார்.