ஈழத்தமிழர் மரபு மெய்யியலை சிதைத்த சிங்கள பேரினவாதம்

breaking
823/73 ம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ம் அத்தியாயம்) 16ம் பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக நல்லாட்சி அரசாங்க காலத்திலும் அதற்க்கு முந்திய மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலும் தொல்லியல் திணைக்களம் சிறப்பு வர்த்தமானிகள் மூலம் அடையப்படுத்தி இருக்கிறது. அவற்றில் சில,
1. ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்
2. மாந்தைகிழக்கு பூவரங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில்
3. குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில்
4. குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில்
5. பாண்டியன்குளம் சிவன் கோவில்
6. வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில்
7. குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில
8. மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில்
9. மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில
10. ஒதியமலையில் வைரவர் கோவில்
11. முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில்
12. திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை
13. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்
14. புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில்
15. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம்
16. மூதூர், சூடைக்குடா மத்தள மலைப்பகுதி முருகன் ஆலயம்
17. திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம்
18.மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்,
19. சிவபுரம் சிவாலயம்,
20. மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில்
21. குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்
22. ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில்
23. கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில்
24. மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்
25. மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை
இன்று பேசுபொருளாக இருக்கும் திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல கட்டுமானங்களையும், தொல்பொருளியல் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வருகிறது . குறிப்பாக இந்தக் கோவில் வளாகத்தில் இருக்கின்ற கட்டுமாணங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. என்றும் அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்றும் அறிவித்து இருந்தார்கள்
அதே போல பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தின் போது மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வர பட்டு இருந்தன. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இந்த நடைமுறைகளை மீள பெற முடியவில்லை கடந்த வரலாற்று காலத்தில் கோயில் கொண்டிருந்த பிள்ளையார் ஆலய கோவில் இன்று அத்திபாரம் மட்டும் தான் உள்ளது .
தமிழர் வாழ்வியலை/ தொன்மையை சிதைக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த கொடூரங்கள் கோத்தபாயா ராஜபக்சே ஆட்சி காலத்தில் உக்கிரம் பெற தொடங்கி இருக்கின்றன.
இந்த நிலையில் சுய நிர்ணய உரிமையை கோரும் தமிழ் தேசிய கட்சிகள் தொல்லியல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலணிகளை எதிர்கொள்ளுவதற்கான செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும்
-இனமொன்றின் குரல்