சிறிலங்கா புதிய கொரொனா மையமாகியது கந்தக்காடு: புணர்வாழ்வு நிலைய ஆலோசகருக்கும் மகள்களிற்கும் தொற்று

breaking
  கந்தகாடு போதைப்பொருள் அடிமைகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் மத்திய நிலையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மேலும் ஒருவருக்கும் அவருடைய இரு பெண் பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி தகவலை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி அனுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுமுறைக்காக வீடு சென்றிருந்த நிலையில் குறித்த கிராமத்தில் இவருடன் தொடர்பை பேணிய 70 சிறுவர்கள் உட்பட 300 கிராமா வாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு பயிற்சி வழங்கவென திசாவெவ இராணுவ முகாமில் இருந்து சென்ற இராணுவ அதிகாரியே கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆலோசகரென்பது குறிப்பிடத்தக்கது.