யாழ்.கீரிமலையில் மர்ம குண்டுவெடிப்பு மூவர் காயம்: பிரதேசத்தில் இராணுவ குவிப்பு, பதட்டம்

breaking
  யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் மர்ம வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருந்து மர்ம வெடிகுண்டு ஒன்றை மீட்டதாகவும் அதனை பிரித்து பார்க்க முயன்றபோது தீ பற்றியதில் அது வெடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயமடைந்த நிலையில் மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. மேலும் குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.