ஈழத்தமிழர்களை எழுச்சியுறவைத்த கறுப்பு ஜுலை 1983 - சிவசக்தி

breaking

ஈழத்தழிழர்களின் வரலாற்றுத் தடத்தில் மறந்துபோகமுடியாத ஆழமான நினைவுகளைப் பதித்துச் சென்றது1983 கறுப்பு ஜுலை பலநூறுபேர் உயிரிழக்கவும், இலட்சக்கணக்கானோர் அகதிகளாகவும்காரணமாகியது இந்தக் கறுப்பு ஜுலை.

சிங்களப் பேரின அரசியல்வாதிகளில் ஒருவராகவும்இலங்கையின் அதிபராகவும் இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் நன்கு திட்டமிடப்பட்டு, தமிழர்கள் மீதுஏவிவிடப்பட்டதே இந்த வன்கொடுமைகளாகும்.

தமிழர்களின் உயிர்கள் அழிக்கப்பட்டது. ஒரே இரவில்இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் வீகளை இழந்துஏதிலிகளாக மாற்றப்பட்டனர். கடுமையான உழைப்பின்மூலம்  ஏராளமான சொத்துகளைதேட்டமாக்கிவைத்திருந்த கொழும்புத் தமிழர்கள்உடுத்தஉடைகளுடன் வீதிக்கு விரட்டப்பட்டனர். பலபெண்கள் பாலியல் வன்முறைக்கும்உள்ளாக்கப்பட்டனர். மனித சமுகம் அருவருக்கத்தக்கமுறையில் தமிழ்மக்கள் மீதான வன்முறைகள்கட்டவிழ்த்து விடப்பட்டன. பல இடங்களில் அரசகாவற்றுறையினரின் முன்னிலையிலேயே தமிழ்மக்கள்கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் இருந்தனர்.

மட்டுமன்றி, தமிழர்களுக்கு உரித்துடைய பலகோடிபெறுமதியான உடைமைகள் எரித்தழிக்கப்பட்டன. தமிழர்களின் வணிக நிலையங்கள் சூறையாடப்பட்டன. இது நன்கு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாகவேஅன்று நடத்தப்பட்டது என்பதை அரசியல் ஆய்வாளர்கள்நன்கறிவர்.

வெலிக்கடைச்சிறையிலும் சிறைவைக்கப்பட்டிருந்ததமிழ் இளைஞர்கள் வெட்டியும் குத்தியும் படுகொலைசெய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகள் ஜுலை 25, 27 ஆகிய இருநாட்களில்  கூடவிருந்த சிங்களச்சிறைக்கைதிகளால் நடத்தப்பட்டன. இதற்குசிறையதிகாரிகளும் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர். தீவரவாதிகளாக குற்றஞ்சுமத்தப்பட்டுகைதுசெய்யப்பட்ட குட்டிமணி, ஜெகன் என்கின்ற இருஇளைஞர்கள் உட்பட 52 பேர் இவ்வாறு சிறையில்படுகொலையுண்டார்கள்.  

1983 ஜுலை க் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின்குருதி காயமுன்னர் வெளிநாட்டு ஊடகம்ஒன்றிற்குநேர்முகமளித்த ஐனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ' தமிழர்களின் பாதுகாப்புக்கு நான்ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது. ' எனத்தெரிவித்தார். இதனூடாக தமிழ்மக்களின் மேல்தனக்கிருந்த இனவாத வேற்றுமை உணர்வை அவர்வெளிப்படுத்தினார்.

தமிழினத்தவர்களைப் பல்வேறுவழிகளில் அடக்கிஒடுக்கிவந்த சிறீலங்கா அரசிற்கு, தக்கதொரு பதிலடிகொடுக்க தேசியத்தலைவர் அவர்கள் திட்டமிட்டார். தமிழ்மக்களை தாக்குவதும், அவர்களின் உரிமைகளைமறுப்பதும், தமிழ் இளையோரின் கல்வியுரிமையைமறுத்ததுடன், இளைஞர்களை கைதுசெய்தும்கடத்தியும் படுகொலை செய்வது என்கின்றஅரசபயங்கரவாதத்துக்கு நெத்தியடி கொடுக்கும் நாள்நெருங்கியது.

இவ்வேளை விடுதலைப் போராட்டத்தின் முதலாவதுதாக்குதற் தளபதியும் தேசியத் தலைவரின்உற்றதோழனுமான சீலன் மீசாலையில்  படையினரின்சுற்றிவளைப்பில் படுகாயமடைந்தார். அவர் தன்னைச்சுட்டுவிட்டு தப்புமாறு தோழர்களைப்பணித்தார். அதன்படி இயக்க மரபுரிமைப்படி அவர் எதிரியிடம்உயிரோடு பிடிபடாது, வீரச்சாவணைத்தார்.

இவை அனைத்துக்குமான விடையாகவே யாழ்ப்பாணம்திருநெல்வேலியில் படையினரின் சுற்றுக்காவல்அணிமீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈழத்தமிழர்களின் இனவிடுதலை உணர்வைப்புறக்கணித்தது மட்டுமல்லாது, அந்த விடுதலைஉணர்வை படைபலத்தின் மூலமாக அடக்கிவிடலாம்என நினைத்த பேரினவாதத்துக்கு கொடுக்கப்பட்டசெய்தியாகவும் இத்தாக்குதல் அன்று அமைந்தது.  

இத் தாக்குதலில் 13 படையினர் கண்ணிவெடியில்கொல்லப்பட்டதை தனது அரசியலாக்கி, ஓர்இனப்படுகொலையையே தமிழ்மக்கள் மீது ஏவவிட்டவர்ஜே.ஆர். ஜெயவர்த்தன இவர் பிறப்பால்கிறிஸ்தவரானபோதும் சிங்கள பௌத்தத்தின்காவலராக தன்னை மாற்றிக்கொண்ட பேரினவாதி.தமிழ்மக்கள் மீதான இனவெறுப்புணர்வை விதைத்ததில்இவருக்கும் பெரும்பங்குண்டு என்பதைவரலாற்றாசிரியர்கள் நன்கறிவர்.

தென்னிலங்கையில் தமிழர்கள் பொருளாதாரவளர்ச்சியடைந்திருந்தார்கள். தமிழ்மக்கள் அங்குவசதிவாய்ப்புகளுடன் சிறப்பாகவாழ்வதை சிங்களப்பேரினவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழ்மக்களின் பொருளாதாரத்தின் அடித்தளமானவாணிபத்தை நிறுத்த, சிங்களப்பேரினவாதம்காத்திருந்தது.

அதுமடடுமன்றி, 1983 மே மாதத்தில் உள்ளுராட்சிக்கானதேர்தல் நடைபெற்றது. தமிழ்மக்களின்மீதுமனிதப்பண்பாட்டிற்கு முரணாக அடக்குமுறைகளையும்ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசைப்புறக்கணிக்கும் வகையில் தமிழ்மக்களை வாக்களிப்பில் தமிழ்மக்களை வாக்களிக்கவேண்டாம் எனவிடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தவேண்டுகோளுக்கிணங்கி தமிழ்மக்கள்உள்ளுராட்சித் தேர்தலைப் புறக்கணித்து, அரசிற்குநெருக்கடியை ஏற்படுத்தினர். ஆதனால் தமிழ்மக்களின்மீது பழிதீர்க்க ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசுகாத்திருந்தது. இதுவும் 1883 ஜுலைஇனப்படுகொலைக்கான காரணமாக அமைந்தது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை  வைத்து, தமதுதமிழர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை அதுநிறைவேற்றிக்கொண்டது என்பதுதான் உண்மையாகும்.

ஜுலை 23 நள்ளிரவில் தொடங்கி ஆறு நாட்களாக இந்ததிட்டமிட்ட இன அழிப்பு நடைபெற்றது. இலங்கை அரசுகண்துடைப்பாக ஊரடங்குச்சட்டத்தைநடைமுறைப்படுத்தியிருந்தபோதும், அரசகாவற்றுறையினரும், படையினரும்தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிஉற்சாகப்படுத்தினர்.

இந்தக் கறுப்பு ஜுலைத் தாக்குதல்கள் தமிழர்களின்மனங்களில் ஆறாத வடுவாகப் பதிந்ததுடன், தமிழர்களின் விடுதலைப்போராட்ட உணர்வையும்கிளர்த்திவிட்டது. பெரும்பாலான தமிழ்மக்களைஇளையதலைமுறையினரின் எழுச்சிமிக்கவிடுதலைப்போராட்டத்திற்கு உறுதுணையாகவும்மாற்றியது. பல்லாயிரக்கணக்கான தமிழ்இளையோர்கள் இன உணர்வால் உந்தப்பட்டு, விடுதலைப்போராளிகளாக இணையவும் தூண்டுதலாகஅமைந்தது.

அதேவேளை இந்த ஜுலைக்கலவரத்தின்பின்னர் தான், இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய நடுவண்அரசின் தலையீடும் ஏற்பட்டது. தமிழ்மக்களின்இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல்தீர்வை வலியுறுத்திய இந்திய நடுவண் அரசு, போராளிக்குழுக்களுக்கும் இராணுவப் பயிற்சியளிக்கமுன்வந்தது.

எனவே தான் 1983 ஜுலை என்பது ஈழத் தமிழர்களின்ஆன்மாவில் அழிக்கமுடியாத வடுவாகநிலைத்திருக்கிறது.