1300 ரூபா, மதியச்சாப்பாடு, மதுப்போத்தல்: சுமந்திரன் களமிறக்கியுள்ள பிரச்சார கூலியாட்கள்

breaking
  சிறிலங்கா தேர்தலில் வென்றுவிடுவதற்காக வடக்கில் கோடிக்கணக்கான பணத்தை சுமந்திரன் வாரியிறைக்கும் அதிர்ச்சித் தகவல் எங்கள் காதுகளிற்கு எட்டியுள்ளது. தெரிந்த அந்த தகவல்களை மக்களிற்கு அறியத்தருவதும் ஊடகத்தின் கடமையல்லவா? முகப்புத்தகத்தினூடாக விளம்பரம் செய்தவர்களின் விபரங்கள் அண்மையில் வெளியாகியிருந்தது அவற்றில் கூட அங்கையன் சுமந்திரன் பெயர்கள் முன்னணியில் இருந்தன. முன்னெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களிற்காக தொண்டர்கள் வீடு வீடாக ஏறி இறங்குவார்கள். வரவுள்ள தேர்தலின் தன் பிரச்சாரபபணிக்காக நாளாந்த கூலிக்கு ஆட்களை இறக்கிவிட்டிருக்கிறார் சுமந்திரன் [caption id="attachment_145364" align="alignleft" width="300"] பருத்தித்துறை அணி[/caption] பருத்தித்துறையில் பிரதேச சபை உறுப்பினர் தினேஸ் தலைமையில் ஒரு அணியும் நெல்லியடி, கரவெட்டியில் பகுதிகளிலும் தலா ஒரு அணியும் களமிறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பகுதியில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினரான குமாரசிங்கம் தலைமையில் அணிகள் களம் இறக்கப்பட்டுள்ளன.   [caption id="attachment_145365" align="alignleft" width="300"] கிளிநொச்சி ஒருங்கிணைப்பாளர் சுமந்திரனுடன்[/caption] யாழ் தேர்தல் மாவட்டத்தில்  உள்ள வாசிகசாலைகள் மற்றும் மக்கள் அமைப்புகளை அணுகும் சுமந்திரன் தரப்பு பணம், மதுபானம் தரலாம்  எனக்கூறி தங்களிற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுவருகிறது.   [caption id="attachment_145366" align="alignleft" width="300"] யடாயு இளைஞர் அமைப்பு பரப்புரைக்கு புறப்படும் போது[/caption] அந்த வகையில் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள யடாயு இளைஞர்கள் அமைப்பு சேர்ந்த 20 வரையான இளைஞர்கள் சுமந்திரனுக்கான பிரச்சாரங்களை வீடு வீடா சென்று முன்னெடுத்து வருகிறார்கள். இந்த   கூலிப் பரப்புரையாட்களுக்கு நாளாந்த கூலியாக 1300 ரூபாவும் மதியச் சாப்பாடும் பணி முடிந்து வீடு செல்லும் போது மதுப் போத்தல் ஒன்றும் வழங்கப்படுகிறது, கிளிநொச்சி கூலிப் பரப்புரை ஆட்களிற்கு 1100 ரூபாவுடன் மதிய சாப்பாடு + மதுப் போத்தல் மட்டுமே வழங்கப்படுவதாக தெரியவருகிறது இதில் என்ன வேடிக்கையெனில் வாக்கு போடும் வயதையடையாத சிறுவர்களும் அழைத்துச் செல்லப்படுவதுடன் அவர்களை தலைமை தாங்கிச் செல்லும் பிரதான கூலி பரப்புரையாளிகள்  தலைக்கு 300 ரூபாவை "கொமிசனாக' பிடித்துக்கொண்டு 1000 ரூபாவை மட்டும் வழங்கி வருகிறார்கள். நாங்கள் தும்புத்தடியை விட்டால் அதற்கு கூட தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று சொன்ன வழி வந்த சுமந்திரன் அண்மைக்காலமாக விடுதலைப்போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்தி தமிழ் மக்களின் எதிர்ப்புகளை சம்பாதிச்சு வைத்திருப்பதாலேயே பணத்தை தண்ணியாக இறைக்கவேண்டி  ஏற்பட்டிருக்கிறது. சுமந்திரனுக்கு ஏது இவ்வளவு பணம் என்று நினைப்பவர்கள் இதுதான் அந்த 20 கோடி கனடா காசு எண்ணினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல....