Take a fresh look at your lifestyle.

ஊரடங்கு காலப்பகுதியில் கர்ப்பமான 7000 பாடசாலை மாணவிகள்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஐந்து மாதங்களில் மாத்திரம் 7000 பாடசாலை மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சம் காணப்படுகின்ற நிலையில் பல நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆபிரிக்க நாடான மல்லாவியில் பாடசாலைகள் மூடப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இக் காலப் பகுதிக்குள் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பல மாணவிகள் 10 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக் கூடங்களையும் மூட அரசு உத்தரவிட்டது இதன் பின்னரே மாணவிகள் அதாவது சிறுமிகள் அதிகரித்துள்ளதாக குறித்து அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக பல நகரில் மட்டும் இந்த காலகட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

%d bloggers like this: