அறம் பிழைத்து ஆடிய அணியை மீண்டும் அரங்கிற்கு அனுப்புவது மகா பாவம்.

breaking

மானமும் வீரமும் பெரிதாகக் கொண்ட வீர மறவன் ஒருவன் தயவால் உருவான அணி ஒன்று தமிழ்த்தேசியத்தின் (வெற்றிக்காய்) விடுதலைக்காய் களமாட தமிழ் மக்களால் நாடாளுமன்றம் என்ற ஆடுகளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே! எந்த இலக்கினை அடைய அனுப்பி வைக்கப்பட்டதோ அந்த இலக்கினில் இருந்து தடம் புரண்டுபோயுள்ளது. படு மோசமாக 'அறம் பிழைத்து ஆடியதுடன் வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கோட்டைவிட்டு' வந்துள்ளது..  மட்டுமல்லாது மாற்றான் அணி வெல்வதற்கான வாய்ப்பையும் அள்ளிக் கொடுத்து படுதோல்வியடைந்து வெட்கம்கெட்டு இப்போது விழிபிதுங்கி நிற்கின்றது.

கடும் உழைப்பாளிக்கே எந்த ஆட்டத்திலும் இடமுண்டு. சிறு தவறு இழைப்பினும் களத்திலிருந்து அகற்றப்பட்டு விடுவதை நாம் பார்க்கின்றோம். புந ;தை தடுத்து நிறுத்த (stop) முடியவில்லை, பந்தை சரியான இடத்திற்கு பாஸ் (pass) பண்ணவோ எறியவோ (thorow) தலையைப் ( heading) பாவித்ததோ கிடையாது.deffence line இல் ஆடவிட்டால் கோல்களைச் சொந்த கம்பத்துள் அல்லவா அடித்துள்ளார்கள் (own goal) என்ன அநியாயமடா இது?? மாற்றான் அணியை வெல்லவைக்கவோ இவர்கள் சென்றார்கள்? ஒரே சொதப்பல் ஆட்டம் .

இங்கிருந்து அனுப்பிய அணியின் முகாமையாளரின் பேச்சுக்கோ எந்த மரியாதையும் கிடையாது. அணியின் தலைவரோ களைத்துப்போய்தடுமாறி கீழே விழும் நிலைக்குச் சென்றுவிட்டார் இந்த இலட்சணத்தில் மீண்டும் தங்களை விட்டால் ஆட்கள் கிடையாது என களத்தில் மீண்டும் இறங்க அடம்பிடித்து அல்லவோ நிற்கின்றனர். மட்டுமல்ல முன்னரே மோசமாக ஆடீ களத்தை விட்டு ஓடிவர்களுமல்லவா ஆடவேண்டும் என துள்ளுகின்றார்கள் புதிய ஆற்றலுள்ள இளம் அரசியல் ஆட்டக் காரனைப்போடு என்றால் குசினியில் வெங்காயம் வெட்டுற ஆளையல்லவா களம் இறக்கி யிருக்கிறார்கள்.நாடாளுமன்றம் என்ன சமயல் கூடமா?

இளம் வீரர்களுக்கு இடம் விட்டு மைதானத்தை விட்டு வெளியேறி வீட்டில் ஓய்வெடுக்க வேண்டியவர்களை, மமைதானமும் தெரியாது கோல் கம்பமும் தெரியாது தன்படை எது மாற்றான் படை எது என்றும் தெரியாது ஓடித்திரியும் இவர்களை இம்முறை களத்தை விட்டு விரட்டியடிப்பதுதான் ஒரே வழி. தூர இலக்கு- செயற்கூறு (vision mission) . தரவுகள் தகவல்கள் (facts and figures) எவையும் இவாகளில் பலருக்கு கிடையாது. கடந்த ஐந்து வருடகாலத்தில் அவர்களின் சாதனைப்படடியல் என்ன?

கேப்பாபிலவுக்கு விடுதலை இல்லை முள்ளிக்குளத்துக்கு விடுதலை இல்லை மன்னார் மாந்தைப்புதைகுழிகள் மூடீயாயிற்று. காணாமல் போனோர் விவகாரம் மறந்து போச்சு. போர்க்குற்றத்திற்கு சாவுமணி அடித்தாயிற்று. கொக்கிளாய்,நாயாறு சவுத்பார் மடுரோட் சிங்களமயமாயிற்று தள்ளாடி முழுவதும் படைமுகாமாயிற்று இன்னும் எத்தனை அவலங்கள் எவற்றிற்கும் விடுதலை இல்லை. அரசியல் கைதிளுக்கு விடுதலை இல்லை ஒரு சுதாகரனைக்கூட இவர்களால் விடுவிக்க முடியவில்லையே !. சம்பந்தன் ஐயாவின் தொகுதியிலுள்ள கன்னியாவுக்கு பிக்குவிடம் ரிக்கட் வாங்கி குளிக்கும் அவலநிலை. மாவீரர்களின் இரத்தத்தில் பாராளுமன்றம் போய் சுகம் அனுபவித்துவிட்டு அவர்களை இழிவாகப்பேசும் அயோக்கியத்தனம் வேறு, ரணிலையும் அவரது அரசையும் கூடவே இருந்து முண்டு கொடுத்து  காப்பாற்றியது தவிர செய்தது என்ன? நாடாளுமன்றம் என்ன? கோப்பி குடித்து அலட்டுகின்ற 'கபே'யா அல்லது வரிவிலக்கு 'கார்'; பேமிற் வாங்கி ஓட்டும் சுற்றுலா மையமா??; இவர்களைக் கொண்டா தமிழ்த் தேசியத்தின் விடுதலையை வெல்லப் போகிறோம்? மீண்டும் தம்மைக்களமாட (சுகமாட) வேண்டி இந்த 'உழுத்தங்கட்டை' அணி களம் இறங்கியுள்ளது.

'அறம் பிழைத்து ஆடீயோரை மீண்டும் அனுமதிப்பது மகா பாவம்.' தமிழ்த்தேசியத்தை சவப்பெட்டியினுள் வைத்து அடிக்கும். கடைசி ஆணியாகவும் அது இருக்கும். இந்த அயோக்கியர்களை இம்முறை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி. 'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இங்கு கொள்ளளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தெரிந்து நடந்நு கொள்ளடா தமிழா விழித்து நடந்து கொள்ளடா'

'சொய்சா'