'வடக்கின் துயரம் வன்னி.'

breaking

'ஐரோப்பாவின் நோயாளி துருக்கி' 'குவாங்கோ சீனாவின் துயரம் ;' என துருக்கியும், சீனாவும் முன்பு அழைக்கப்பட்டது போல மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வன்னிப் பிரதேசமானது 'வடமாகாணத்தின் துயரம்'; நிறைந்த ஒரு பகுதியாகவே பல வருடங்களாக இருந்து வருகிறது. யுத்தகாலத்தில் இப்பிரதேசம் சிதைந்து சின்னா பின்மாகிப் போயிருந்தது. ஆயினும் நில வளமும் கடல் வளமும், காட்டு வளமும், மண் வளமும் பாதுகாக்கப்பட்டீருந்தது. எவையும் கொள்ளை போகவில்லை. கசிப்பு உற்பத்தியும், போதைவஸ்துக் கடத்தல்கள் போன்ற மக்கள் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகள் எவையும் தலை காட்டீயிருக்கவில்லை. மாறாக யுத்தத்தின் பின்னர் மேற்குறித்த அனைத்தும் இங்கு தாராளமயமாகின வுடமாகாணத்தின் தென் எல்லையோரம் சார்ந்து குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பே இன்று பேரினவாதிகளினால் இலக்குவைக்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போர் முடிவுற்ற கையுடன் மணலாறு பிரதேசம் 'வெலி ஓயா' வாக மாறியது . வன்னியிலே வவுனியா தெற்கில் ஏற்கனவே ஒரு பெருமபான்மை பிரதேச செயலர் பிரிவு உள்ளது இப்போது முல்லைத்தீவில் புதிதாக ஒன்று உருவாகியுள்ளது. அடுத்து மன்னாரில் முசலிப்பிரிவில் இன்னொன்று உருவாகலாம் என்ற அச்சமும் உள்ளது.

கொண்டச்சி மரமுந்திரிகைப் பண்ணை, மடுரோட்டில் இருந்து பறையனரலங்குளம் வரையிலான 5கி.மீ நீளமான பகுதியிலுள்ள குடியிருப்புகள் (? ), ஓயாமடு விலிருந்து குஞ்சுக்குள காட்டுப்பகுதியினூடாக அமைக்கப்பட்டுள்ள வீதிகள், வில்பத்து சரணாலய விஸ்தரிப்பு, முசலிப்பகுதியில் காடுகள் துப்புரவு செய்யப்பட்டு குடியிருப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலங்கள் என்பவற்றை அவதானிக்கும்போது விரைவில் அப்பகுதிகள் எல்லாம் எவருக்கோ (? ) இரையாகலாம் போலவே படுகிறது.

வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் (வங்காலை பறவைகள் சரணாலயம் 5000 கெக்டயர் ) என பெருமளவு நிலங்கள் வன்னியில் இன்று காடுகள் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டது. அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் அரசு அமைத்த வீதிகளால் இப்பகுதி மக்களை விட அப்பால் உள்ளவர்களே அதிக நன்மைகளை அடைந்துள்ளனர் எனலாம்.. தவிர குறிப்பிட்டுச் சொல்லக்கூடீய பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் எவையும் நடந்தேறியதற்கான சான்றுகள் எவையும் இல்லை. முல்லைத்தீவில் கொக்கிளாய், நாயாற்று ஏரிகளின் மீன் வளப்பகுதி பறிபோனது . மன்னாரில் சவுதிபார் முதல் தெற்கு கடல் ஓரப் பகுதிகளின் கதை முடியும் தறுவாயில் உள்ளது. காட்டுவளமும்,மண்வளமும் ஒருபுறம் தெற்கு நோக்கி விரையும் காற்றுச்சக்திவளம் மறுபுறம் எல்லாம் தென்பகுதிக்கே.

மூன்றாம் நிலைக்கல்வி அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் வவுனியாவில் அமைந்த வளாகம், மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் தமிழ் மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என கூறுவதற்கில்லை தெற்கு மாணவர்கள் அடையும் நன்மையே அதிகம். . முல்லைத்தீவில் மீன்பிடி பல்கலைக்கழக விவகாரம் இன்னும் கிடப்பில் உள்ளது. ஏறத்தாழ முல்லைத்தீவும், மன்னாரும் முற்றாக கைவிடப்பட்ட ஒரு நிலைதான் காணப்படுகிறது. உயர்தரத்தில் சித்திபெற்ற இப்பகுதி மாணவர்களின் நிலையோ பரிதாபகரமனது. .மாங்குளம் வடக்கின் தலை நகர் என்பது 1980 இலிருந்து வெறும் வாய்ப்பேச்சாகவே இருந்து வருகிறது.

மாவட்ட அலுவலகங்கள் தவிர வுடமாணசபையின் கீழ் உள்ள அமைச்சு அலுவலகங்கள் எவையும் வன்னியில் கிடையாது. பரவலாக்கும் எண்ணமும் உரியவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் தேர்தல் வேறு வருகிறது. பாராளுமன்றப் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கையில் (6) 4 முதல் 5பேர் வரையில் தமிழர் தரப்புதான் இருந்து வருகிறது.; தாம் அடைந்த நன்மைகளை விட இவர்களால் வன்னி மக்கள் அடைந்த விடுதலை எவையுமில்லை. கேப்பாபிலவு, முள்ளிக்குளம் ,கொக்கிளாய், நாயாறு .சவுத்பார் காயாக்குளி ,தலைமன்னபர் பியர் பள்ளிமுனை எவற்றிற்கும் இதுவரை விடுதலை இல்லை தள்ளாடி, மற்றும் மடுரோட் பகுதிகள் முழுவதும் தொலைந்து போனது. மாந்தை புதைகுழி, மன்னார் மனித புதைகுழி சத்தமின்றி புதைகுழிக்குள் அடங்கிப்போனது. இந்த இலட்சணத்தில் வரும் தேர்தலில் முன்பு 'தமிழரசுக்கட்சி' என்றும் பின்னர் 'தமிழர் விடுதலைக் கூட்டணி' என்றும் வந்தார்கள் இப்போது பெயரை கூட்டாக்கி 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என பெயருடன் தேசியத்திற்கு அர்த்தம் புரியாது அதே 'மேதாவிகள்' களம் புகுந்துள்ளனர். இவர்களிடம ;( vision ) தூர இலக்கு செயற்கூறு (mission) எவையும் கிடையாது. வன்னி பரப்பின் துறைசார்ந்த விடயங்கள் தொடர்பான தரவுகள் ,தகவல்கள் (Facts and Figures) கொண்டு நாடாளுமன்றிலே வினைத்திறனுடன் செயலாற்றியதும் கிடையாது.. பலருக்கு அந்த ஆற்றல்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. தப்பான ஆட்டம் ஆடி மாற்றான் அணிக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்ததுதான் மிச்சம்.; வெற்றியும் ,விடுதலையும் தமது அணி பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு தோல்வியையும் தலைகுனிவையும் ஏற்படுத்திய வலுக்குன்றிய ஓர் அணியாகவே இன்று மாறியுள்ளது.

விடுதலைப் பயணத்தில் தோல்விமேல் தோல்வியைக்கண்ட இந்த அணி களத்தை விட்டு எப்பவோ ஓடியிருக்கவேண்டும் அதுவே அறமுமாகும்.. அறத்தைப் புறந்தள்ளி மானத்தையும் ,வீரத்தையும் கொச்சைப்படுத்தி உயிரும் சுகமும் முக்கியம் என ;கொண்டு மீண்டும் களம் இறங்கியிருப்பது வெட்கக்கேடானது. மீண்டும் தேர்தலில் 'மாயா ஐால வெற்றி' பெறலாம் ஆனால் ஆதுவே வன்னியின் மாபெரும் மானிட அனர்த்தமாக அமையும்.

இது வன்னியின் மற்றொரு பெருந் துயரமாகவே இருக்கும்.. மலிவுப் புரியாணி, வரிவிலக்கு வாகன அனுமதிப ;பத்திரம், தலைநகரில் உல்லாச வ Pடு, பொலிஸ் பாதுகாப்பு. வி..ஐ.பி பாஸ்போட் ,விசேட படிகள் ஆகா என்ன சுகம்? மானமும் வீரமும் போய் -சுகமும் , உயிரும் இறுதி இலக்காகிவிட்டது. பேரம்பேசும் சக்தியைப் பலப்படுத்துவோம், மாவீரர்களின் கனவை நனவாக்குவோம், மீண்டும் வீறுகொண்டு எழுவோம் என்று பொய்யும், புரட்டும், திருட்டும் கலந்து மக்களை உசுப்பேத்தி மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறது இந்தக்கூட்டு. . இந்த மாபியாக்களைப் புறந்தள்ளி மானத்தையும் வீரத்தையும் விலையாகக்கொடுத்த மாவீரர்களின் கனவை நனவாக்க தமிழ்த்தேசியத்தை அறம்சார்ந்து நேசிக்கும் வினைத்திறனும் ஆற்றலும் ஆளுமையும் கொண்ட விலைபோகா மறவர்களுக்கு உங்கள் வலிமையான வாக்குகளை அளிப்போம் இல்லையெனில் தேர்தல் முடிந்தபின் ...விளையாட்டுத் திடலில் வென்றவர்கள் பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு செல்ல ரசிகர்களோ தொண்டை கிழியக் கத்திவிட்டு வெறுங்கையோடு வீடுபோய்ச் சேருவதைப் போல ....தேர்தலில் வென்றோர் தமது பைகளை நிரப்பிச்செல்ல ஆதரவாளர்களோ நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான். .வடக்கினதும் வன்னியினதும் துயரமும் தொடரும்..