புத்தளம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மீனவரின் சடலம்

breaking
  வயதுடைய நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கடந்த 2ஆம் திகதி புத்தளம் களப்பில் சென்ற தனது தந்தை விடு திரும்பவில்லை எனவும், தந்தையின் தெப்பம் மற்றும் தந்தை எடுத்துச் சென்ற மின்சார டோர்ச் லைட் என்பன களப்பு பிரதேசத்தில் காணப்படுவதாகவும் அவரது மகனால் பொலிஸில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், குறித்த களப்பு பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற புத்தளம் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்தனர். குறித்த மீனவரின் பிரேத பரிசோதனை மற்றும் நீதிவான் மரண விசாரணை என்பன இன்று (04) இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.