பொதுத் தேர்தல் – வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்

breaking
பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 9ஆவது நாடாளுமன்றுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றிருந்தன. 5 மணியளவில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற பின்னர் சுமார் 8 மணியளவில் வாக்குப் பெட்டிகள் யாவும் பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. இம்முறை தேர்தலில் 70வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதாக  சிங்கள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இன்று பிற்பகலுக்கு முன்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் இறுதி தேர்தல் முடிவுகளை இன்று நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், இம்முறை தேர்தலில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.