ஞாயிற்றுக்கிழமை இலங்கை நாட்டின் பிரதமராக மஹிந்த பதவியேற்கின்றார்

breaking
2020 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியினை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றில் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இன்னும் 5 ஆசனங்கள் அக்கட்சிக்கு தேவைப்படுகின்றன. அந்தவகையில் கூட்டணி கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்றுக்கொண்ட 2 ஆசனங்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கில் பெற்ற ஒரு ஆசனமும் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பெற்ற ஆசனங்களின் பிரகாரம் அவர்கள் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பானமையை நாடாளுமன்றில் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க உள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும் அமைச்சரவை பதவியேற்பது உட்பட முக்கிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.