தமிழர்களை நெருங்கும் பேராபத்து?

breaking
இந்தத் தலைப்பை எழுதிக் கொண்டிருக்கும் போது, தேர்தல் முடிவுகள்முழுமையாக வெளியாகியிருக்கவில்லை. ஆனால், வெளியான தேர்தல்முடிவுகளை அவதானிக்கும் போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது.அதாவது, ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன பெரும் வெற்றியைப் பதிவுசெய்யக் கூடும். அவ்வாறானதொரு வெற்றியின் விளைவுகள் என்னவாகஇருக்கும்? 1977இல் ஜே. ஆர். ஜெயவர்த்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மையைபெற்றதன் விளைவாகவே, இன்றிருக்கும் சர்வவல்லமை பொருந்திய1978 இன் அரசில் யாப்பு கொண்டு வரப்பட்டது. தனது அதிகாரத்தையும்ஐக்கிய தேசியக் கட்சியையும் வலுப்படுத்தும் நோக்கிலேயே ஜே. ஆர்.அதனைச் செய்திருந்தார். இன்றுவரை அந்த யாப்பு இலங்கைத் தீவின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கின்றது. அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் இத்தீவில் ஏற்படலாமென்னும் அறிகுறி தெரிகின்றது. இது ஓர் ஆபத்தின் அறிகுறி. நீண்ட காலத்திற்கு தனது குடும்பஉறுப்பினர்கள் அதிகாரத்தில் இருக்கக் கூடிய வகையிலும், பொதுஜனபெரமுனவை தொடர்ந்தும் பலமாக வைத்துக் கொள்ளக் கூடிய வகையிலும்சில சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ராஜபக்ஷக்கள் தீர்மானிக்கக் கூடும். ஆட்சி மாற்றத்தின் மூலமான மூன்றில் இரண்டைக் கொண்டு,ஜனாதிபதியிடம் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை பிரதமருக்கு மாற்றக் கூடியவகையில் 19 ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது.மேலும், சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால்,இப்போது அவையனைத்தும்கேள்விக்குள்ளாகலாம்.   ராஜபக்ஷக்கள்பொதுவாகவே அதிகாரங்கள் பகிரப்படுவதை எதிர்த்து வருபவர்கள்.அதிகம் அதிகாரத்தை தங்களை நோக்கிக் குவிப்பதில் கரிசனையுள்ளவர்கள். இவ்வாறானவர்கள் எப்போதுமே வரலாற்றிலிருந்து பாடங்களைகற்றுக்கொள்ள மறுப்பவர்கள். எனவே, இவ்வாறான பின்னணியுள்ளவர்களின் கையில் பலமானதொரு அரசாங்கம் அகப்படுமாயின், நிச்சயம்ஏற்கனவே இருக்கின்ற ஒப்பீட்டடிப்படையிலான ஜனநாயக ஆட்சியும் கேள்விக்குள்ளாகலாம்.நாடு ஒரு வகையான கிழக்காசிய வகை மாதிரியை நோக்கி நகரலாம்.உதாரணமாக கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் போன்ற நாடுகளில்ஜனநாயகம் இருக்கின்றது. ஆனால், இராணுவத்திற்கும் அதிக செல்வாக்குஇருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையை நோக்கி இலங்கைத் தீவு நகர்ந்தால் அது ஆச்சரியமான ஒன்றல்ல. ராஜபக்ஷக்கள் ஒருவேளைவரலாற்றிலிருந்து எதனையாவது கற்றுக்கொள்ள எத்தனித்தால், ஒருவேளை இது நடக்காமலும் போகலாம். ஆனால், அதிக அதிகாரத்தைஅனுபவிப்பவர்கள் எப்போதுமே வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்வதில்லை. தமிழ் சூழலை எடுத்துக் கொண்டால், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக வெற்றியை பெற்று வந்ததால், தங்களின்வெற்றி மீது அதீத இறுமாப்புக் கொண்டிருந்தது. ஆனால், அது தற்போதுவர்களது கண்களுக்கு முன்னாலேயே சிதையத் தொடங்கியிருக்கின்றது. அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாது விட்டால், அடுத்த தேர்தலில்கூட்டமைப்பும் இப்போதிருப்பது போன்று இருக்கப் போவதில்லை.ராஜபக்ஷக்களிடன் அதிக அதிகாரம் குவிவது மறுபுறத்தில் தமிழ்மக்களின் உரிமைப் பயணத்தை உள்நாட்டுக்குள் முன்னெடுக்கமுடியாதவொரு இரும்புத் திரையை உருவாக்கலாம். இதுவரைஓரளவு இயங்கி வந்தவர்கள் கூட, ராஜபக்ஷக்களின் பலத்தின் மீதானஅச்சத்தினால் உறைநிலைக்குச் செல்லலாம். வடக்கு - கிழக்கில்மேலும் பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்டவேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படலாம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வற்கான எந்தவொரு பலமும்தமிழர்களிடம் இருக்கப் போவதில்லை.   இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் அனைத்தும்ஒரு பொது வேலைத்திட்டம் தொடர்பில் உடனடியாக கலந்தோசித்து, ஒருகூட்டு வேலைத்திட்டத்திற்கு தங்களை தயார்படுத்த வேண்டும். ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியினால் தமிழர்களுக்கான வாய்ப்புக்கள் மிகவும்வேகமாக சுருங்கி வருகின்றது. இனியும் தமிழ்க் கட்சிகள் கொள்கைஎன்னும் பெயரில் குடும்பிச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் இன்னும்சில வருடங்களில் அனைத்தும் எல்லை மீறிவிடும். அதன் பின்னர் தமிழ்ரசியல் என்பது வெறும் தமிழ் கோஷமாக மட்டுமே இருக்க முடியும். -ஈழநாடு