நீலகிரி மாவட்டத்துக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

breaking
  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை தொடருமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மற்றும் கூடலூரில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை தொடருமென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.