சிறிலங்கா வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகம் நிறைந்த தேர்தல்

breaking
  சிறிலங்கா பொதுத் தேர்தலில் மொத்தமாக 7,44,373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன, இது மொத்த வாக்கெண்ணிக்கையில் 4.58% வீதமாகும். சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் இம்முறையே அதிகளவான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவானதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது. அதிகளவான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவானமைக்கு நான்கு முக்கியமான காரணங்கள் காணப்படுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது. பொதுமக்களுடைய தேர்தல் முறைமை தொடர்பான அறிவுமட்டம். சிலர் தாம் வாக்களிக்க வேண்டும் என்ற கடமைக்காக வாக்களிக்கிறார்களே தவிர தேவையான வகையில் சரியான வகையில் வாக்களிப்பதில்லை. ஐக்கிய தேசியக்கட்சியில் ஏற்பட்ட பிளவு கட்சி ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்தமை அல்லது இரண்டு சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களில் யாரைத் தெரிவு செய்வது என்பதில் ஏற்பட்ட குழப்பநிலை வாக்குச்சீட்டில் தவறாக அடையாளங்களை இட்டிருத்தல். பொதுத் தேர்தலில் மொத்தமாக, 12,343,302 (75.89%) வாக்குகள் அளிக்கப்பட்டன, இதில் 744,373 (4.58%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதற்கமைய மொத்தமாக செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்க 11,598,929 (71.32%). மேலும், 39,20,583 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.