பலாலியில் வான்புலிகள் தாக்குதல் நடத்திய நாள் - 11.08.2006

breaking
  வான் புலிகளின் பிறப்பும் – அவர்களின் வெற்றிகரமான போர்ச் செயற்பாடுகளும் சிங்களப் படைகளுடனான போரில் பெரும் திருப்பு முனைகளை உண்டுபண்ணும் சக்தியுடன் தமிழரின் படைப் பல வளர்ச்சிதான் அவர்களுக்கு அரசியல் விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும் ஒரே ஒரு மார்க்கமாக உள்ளது என்பதே இலங்கையின் அரசியல் யதார்த்தமாகும். அந்தப் பல வளர்ச்சியில் வான் புலிகளின் பிறப்பு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் – நம்பிக்கையையும் அளித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மனோதிடத்தை உலகறியச்செய்தநாள் இது. தமிழரை அழிக்க சிங்கள அரசிடம் எஞ்சியிருந்த ஒரேயொரு வல்லாதிக்கப்பிடியான வான்பரப்பிலும் நாம் எழுந்து பறந்தநாள்.
ஓர்நாட்டின் படையமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் வான்படையை நிறுவி, தனியரசு என்ற சொல்லிற்கு மகுடம் சேர்த்தநாள் இது. தமிழரின் இறைமையில் கைவைக்கும் எதிரிக்கு, தமிழரின் வான்படை பதிலிறுத்தநாள். பலாலியில் வான்புலிகளின்  தாக்குதல் நடைபெற்ற நாள்... - 11.08.2006 இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் (மார்ஷல்) உறுதிப்படுத்தினார்.