சுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

breaking
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்  நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020


தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானாது 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது. தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும்இ தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாக நினைவுகள் ஊடாக தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த இவ் விளையாட்டுகளில் தற்போதைய கொரோனாத் தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் சுவிஸ் அரசின் சுகாதரா விதிமுறைகளைக் கடைப்பிடித்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும்இ விளையாட்டு ஆர்வலர்களும் தாயக நினைவுகளை சுமந்தபடி ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு தினங்களும் நடைபெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வுகளில்; சுவிசின் பல கழகங்களில் இருந்தும் கலந்து கொண்ட இளம் தலைமுறையினர் மிகுந்த பற்றுடனும், ஆர்வத்தோடும் உரிய நேரத்தில் பங்குபற்றி எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியமையானது அவர்களின் தேசிய உணர்வையும், பற்றையும் வெளிப்படுத்தி நின்றது. இளைய தலைமுறையினரிடம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தடங்கள், மாவீரர் தியாகங்கள், அவர்களின் வீரவரலாறுகளை நினைவிற் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இப் போட்டிகளானது வளர்ந்தோர் உதைபந்தாட்டம், இளையோர் உதைபந்தாட்டம், பெண்கள் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற பிரிவுகளில் அனைத்து விதமான போட்டிகளும்; ஒருங்கே ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இரு தினங்களும் நடைபெற்றதுடன் 29வது மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டதுடன், இதுவரைகாலமும் இவ் சுற்றுப்போட்டிகளைச் சிறப்பாக நடாத்தித் தந்தவர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கொடிகள் அனைத்தும் இறக்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாக நிறைவடைந்தன. இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். -சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு