கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

breaking
கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.! 10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ போரியல் வரலாற்றின் முதல் கடற்கரும்புலித் தாக்குதல் இதுவே ஆகும்.   தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”