மந்தகதியில் ஶ்ரீலங்கா செல்கிறது: சொல்வது சம்மந்தன்

breaking
ஶ்ரீலங்கா, போருக்­குப் பின்­னர் இலங்­கை­யின் நிலை­மை­க­ளில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னேற்ற நிலை­மை­கள் போது­மா­ன­தாக இல்லை. முன்­னேற்­றம் மிக­வும் மந்­த­மாக அமைந்­துள்­ளது. இவ்­வாறு சுவிட்­ஸர்­லாந்­தின் முன்­னாள் அரச தலை­வ­ரும், அந்த நாட்­டின் சமஸ்­டிப் பேர­வை­யின் உறுப்­பி­ன­ரும், சட்­டம் மற்­றும் பொலிஸ் திணைக்­க­ளத்­தின் அதி­கா­ரி­மான சிமோ­னேட்­டா­ வி­டம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன். இலங்கை வந்­துள்ள சிமோ­னேட்­டாவை எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேற்­றுத் திரு­கோ­ண­ம­லை­யில் சந்­தித்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். அதன்­போதே அவர் இவ்­வாறு சுட்­டிக் காட்­டி­யுள்­ளார். இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில் இரா.சம்­பந்­தன் தெரி­வித்ததா­வது:- அனைத்து மக்­க­ளும் சமத்­து­வ­மா­க­வும், கௌர­வ­மா­க­வும் வாழும் வகை­யி­லான புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும். அதற்­குப் பன்­னா­டு­கள் அர­சுக்கு அழுத்­தம் கொடுக்க வேண்­டும் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னேன். தமிழ் மக்­கள் தொடர்­பா­கப் பல விட­யங்­கள் பேசப்­பட்­டன. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், மீள்­கு­டி­ய­மர்வு, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் போன்ற விட­யங்­கள் தொடர்­பில் விரி­வா­கப் பேசி­னோம். முன்­னேற்­றங்­கள் ஏற்­ப­டுத்­து­வ­தில் பெரும் தாம­தம் நில­வு­கின்­றது என்­பதை எடுத்­துக் கூறி­னேன். இந்த விட­யங்­க­ளில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்த இலங்கை அர­சுக்கு அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­படவேண்­டும் என்று நான் கோரிக்கை விடுத்­தேன். அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­ன­தா­கும். பிரிக்­கப்­ப­டாத நாட்­டுக்­குள் தீர்வை உள்­ள­டக்­கிய அர­ச­மைப்பை உரு­வாக்க வேண்­டும். அனைத்து மக்­க­ளும் சமத்­து­வத்­து­ட­னும், கௌர­வத்­து­ட­னும் வாழும் வகை­யி­லான அரசமைப்பு உருவாக்­கப்­பட வேண்­டும் என்று அவ­ரி­டம் எடுத்­துக் கூறி­னேன். இந்த விட­யத்­தில் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­ப­டு­கின்­றோம் என்­றும், இலங்கை அர­சு­டன் இந்த விட­யங்­கள் தொடர்­பில் தொடர்ந்­தும் தொடர்­பில் இருக்­கி­றோம் என்று சுவிட்ஸர்லாந்­துப் பிர­தி­நிதி தெரி­வித்­தார்– – என்­றார்.