வடமாகாண அமைச்சர்கள் சர்ச்சை முடிவுறாத நிலையில் வேதனம் வழங்கலாமா?

breaking

வடக்கு மாகாண அமைச்சரவையில் தற்போது 6 அமைச்சர்கள் என்ற நிலையில் அமைச்சர்களிற்கான வேதனத்தை வழங்க முடியுமா என்ற ஆலோசணையை வழங்குமாறு வடக்கு மாகாண அமைச்சின் இரு செயலாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண அமைச்சரவையில் இருந்து நீக்கியமை சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியற்றது என உத்தரவிடக்கோரி பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போது டெனீஸ்வரன் தற்போதும் வடக்கு மாகாண சபைநின் சட்டப்படியான அமைச்சர் . என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது வடக்கு மாகாண சபையில் 6 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இருப்பினும் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஓர் மாகாணத்தில் 5 அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும்.

இந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் டெனீஸ்வரன் தவிர்ந்த ஏனையோரில் யார் மூவர் அமைச்சர்கள் என்ற சட்டச் சிக்கல் எழுவதனால் ஏனைய 4 பேரும் அமைச்சர்களிற்கான சலுகைகளை அனுபவிக்க முடியுமா இல்லையா என்ற நிலையில் அதிகாரிகள் தின்றுகின்றனர்.

இந்த நிலையில் யூலை மாதக் கொடுப்பனவினை சிபார்சு செய்யும் நோக்கிலும் எதிர்காலத்தில் எழும் கணக்காய்வு தொடர்பான விடயத்தினை சீர் செய்யும் வகையில் அமைச்சர்களிற்குரிய வேதனத்தை வழங்க முடியுமா எனப் பதிலளிக்குமாறு ஆளுநரிற்கு விண்ணப்பிதனர் .

இருப்பினும் குறித்த கடிதங்களிற்கு ஆளுநர் நேற்று முன்தினம் பதிலளித்துள்ளபோதும் வழங்க முடியும் என்றோ அல்லது வழங்க முடியாது எனவோ நோரடியாக குறிப்பிடாது சட்ட ஏற்பாடுகளை மட்டும் விளக்கியுள்ளார்.

இவ்வாறு ஆளுநர் நேரடியாக பதில் வழங்காது சட்டத்தை மட்டும் சுட்டிக்காட்டியதன் காரணத்தினால் அமைச்சின் செயலாளர்கள் அமைச்சர்களின் சம்பளத்தை வழங்குவதில் அச்சம் பொண்டுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆளுநருக்கு கடிதம் எழுதி தெளிவை கோரினோம் இருப்பினும் கிடைத்த பதில் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றது. என்றார்.