நீண்டகால போதைப்பொருள் விற்பனையாளர் வவுனியாவில் கைது

breaking
  வடதமிழீழம், வவு­னி­யா­வில் நீண்­ட­கா­ல­மா­கப் போதைப் பொருள் விற்­ப­னை­யில் ஈடு­பட்ட பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வவு­னி­யாப் காவல்துறையினர் தெரி­வித்­த­னர். அவ­ரு­டன் பய­ணித்த ஆணும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இந்­தப் பெண் நீண்­ட­கா­ல­மா­கப் காவல்துறையினரால் தேடப்­பட்டு வந்­தார். நேற்­றுப் போதைப் பொருளை விற்­பனை செய்­யும் நோக்­கு­டன் உந்­து­ரு­ளி­யில் சென்­ற­போது உக்­கி­ளாங்­கு­ளத்­தில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­டார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரி­ட­மி­ருந்து 430 மில்­லி­கி­ராம் போதைப் பொருள் கைப்­பற்­றப்­பட்­டது என்­றும் காவல்துறையினர் தெரி­வித்­த­னர். கைது செய்­யப்­பட்ட பெண் 32 வய­து­டை­ய­வர் என்­றும், அவ­ரு­டன் 42 வய­தான ஆண் ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டார் என்­றும் தெரி­வித்த காவல்துறையினர், அவர்­கள் பய­ணித்த உந்­து­ரு­ளி­யும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­த­னர். வன்னி மாவட்­டப் பிர­திப் காவல்துறை மா அதி­பர் அனுர அபே­விக்­கி­ர­ம­வின் பணிப்­பின்­பே­ரில் காவல்துறை அத்­தி­யட்­ச­கர்­க­ளான எம்.தென்­னக்­கோன், மல்­வ­ளகி ஆகி­யோ­ரின் ஆலோ­ச­னைக்கு அமைய இந்­தக் கைது நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. காவல்துறை கொன்ஸ்­ட­பிள் நிரோ­ச­னின் தக­வ­லுக்கு அமைய காவல்துறை பொறுப்­ப­தி­காரி ஜ.பி.பொன்­சேகா தலை­மை­யில் போதை ஒழிப்­புப் பிரிவு உப பரி­சோ­த­கர் நசீம், கொன்ஸ்­ட­பிள்­க­ளான நுவான், அசேல, தரிந்து ஆகி­யோ­ரைக் கொண்ட குழு இந்­தக் கைது நவ­டிக்­கையை மேற்­கொண்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.