எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம்

breaking



தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது.




விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மாவீரர் எழுச்சி நாட்களாக 25,26,27 ஆம் நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன இந்த நாட்களில்தான் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதும் வீதிகள் தோறும் அலங்காரம் செய்வதும் மாவீரர்களின் எழுச்சி நாளுக்காக




மக்கள் அனைவரும் எழுச்சி பதாகைகைள கட்டுவதுமாக தாயகம் அன்று எழுச்சிகோலம் பூண்ட காலம்.

இன்று அடக்கு முறைக்கு மத்தியில் சிங்கள இனவெறியர்கள் மாவீரர்களை புதைத்த இடங்களில் நிலைகொண்டுள்ளதுடன் மாவீரர்களின் தடையங்கள் அனைத்தும் சிங்கள காடையர்களால் அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டு துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் சிங்கள காடையர்களின் நினைவுத்தூபிகள் அங்காங்கே எழுந்து நிக்கின்றன அது இனவெறியின் அடையாளமாக இன்றும் தமிழ்மக்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.

போரில் உயிரிழந்தவர்கைள நினைவிற்கொள்ள எவரும் தடைவிதிக்கமுடியாது என்று உலகநாடுகள் சொன்னாலும் பேரினவாத சிறீலங்கா அரசாங்கம் பல அடக்குமறைகளை மறைமுகமாக கையாள்கின்றது. இன்னிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோன மத்தியிலும் 2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை தமிழ் மக்கள் தங்கள் வீடுகளில் நினைவிற்கொள்வார்கள்



கார்த்திகை பூ பூக்கின்ற மாதம் எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற மாதம்,வானம் மழைத்துளியாய் கண்ணீர் சிந்துகின்ற காலம் இது