மயிலிட்டி வரும் மைத்திரி துறைமுக புணரமைப்பு பணியை ஆரம்பிக்கிறார்

breaking
  வடதமிழீழம், மயி­லிட்­டித் துறை­மு­கம் 425 மில்­லி­யன் ரூபா செல­வில் இரண்டு கட்­டங்­க­ளாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. முதல் கட்ட அபி­வி­ருத்­திப் பணி­கள் ஶ்ரீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­ பால சிறி­சே­ன­வால் இன்று காலை 10 மணிக்கு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்­பில் வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் செய­ல­ணி­யின் செய­லர் வே.சிவ­ஞா­ன­சோதி அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது-, போருக்கு முற்­பட்ட காலத்­தில் இலங்­கை­யின் மீன்­பிடி உற்­பத்­தி­யில் 30 சத­வீ­தத்­துக்கு மேல் பங்­க­ளிப்­புச் செய்த ஒரு பிர­பல்­ய­மான மீன்­பிடி துறை­மு­கம் மயி­லிட்டி. இந்­தத் துறை­மு­கம் போரால் செய­லி­ழந்­தமை வடக்கு மாகா­ணத்­துக்­கும் தேசிய உற்­பத்­திக்­கும் பெரிய பாதிப்­பாக அமைந்­தது. நல்­லாட்சி அர­சின் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத் திட்­டத்­தில் 150 ரூபா மில்­லி­யன் நிதி ஒதுக்­கப்­பட்­டது. இதன்­கீழ் 50 மீற்­றர் நீள­மான கப்­பல்­துறை சுவர் (குவே வோல்), ஹார்­பர் பேசின் மற்­றும் நுழை­வா­யிலை ஆழப்­ப­டுத்­து­தல், அலை தடுப்பு கட்­டு­மா­னம், அலை­தாங்கி, இறங்­கு­துறை மறு­சீ­ர­மைப்பு, எரி­பொ­ருள் நிரப்­பும் நிலை­யம், குளி­ரூட்­டப்­பட்ட அறை­கள், நீர் மற்­றும் மின்­சார வழங்­கல் என்­பன போன்­றவை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டும். ஜக்­கிய நாடு­கள் அபி­வி­ருத்தி நிகழ்­சித் திட்­டத்­தின் கீழ் ரூபா 30 மில்­லி­யன் நிதி­யில் நிர்­வா­கக் கட்­ட­டம், மீன்­பிடி வலை­கள் பின்­னும் நிலை­யம், நீர்­தாங்­கி­கள், கழி­வ­றை­கள் என்­பன அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டும். இரண்­டாம் கட்­ட­மாக ரூபா 245 மில்­லி­ய­னில் அலைத் தடுப்பு கட்­டு­மா­னத்­தின் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்பு, ஏல­மி­டும் நிலை­யம், ஹார்­பர் பேசின் மற்­றும் நுழை­வா­யிலை மேலும் ஆழப்­ப­டுத்­து­தல் என்­பன மேற்­கொள்­ளப்­ப­டும் – என்­றுள்­ளது. இன்­றைய நிகழ்­வில் மீன்­பிடி அமைச்­சர் விஜித் விஜி­த­மு­னி­சொய்சா, பிரதி அமைச்­சர் அமீர் அலி, இரா­ஜங்க அமைச்­சர் திலீப் வெத­ஆ­ராச்சி ஆகி­யோர் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்