வலி.வடக்கு பிரதேசபைக்கு சொந்தமான 7 இடங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தினர்!

breaking

வலி.வடக்குப் பிரதேச சபைக்குரிய காணிகள் கட்டிடங்கள் உட்பட 7 இடங்கள் படையினரின் பிடியிலேயே இருப்பதாக வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

வலி. வடக்குப் பகுதியில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு பகுதி இன்றுவரையில் விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்படாத பகுதிகளிற்குள் அரச கட்டிடங்கள் பலவும் பாடசாலைகளும் விடுவிக்கப்பட வேண்டிய நிலமையே காணப்படுகின்றது. அவ்வாறு காணப்படும் அரச கட்டிடங்கள் நிலங்களில் எமது சபைக்குரிய இடங்கள் மட்டும் 7 இடங்கள் காணப்படுகின்றன.

அவற்றின் பிரகாரம் மிக முக்கியமாக வலி.வடக்கு பிரதேச சபையின் தலமைப் பணிமனைகூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. அதேபோன்று எமது சபையின் காங்கேசன்துறை அலுவலகத்தின் நூல் நிலையம் இ பிரதேச சபையின் சிறுவர் பூங்கா என்பவற்றோடு பிரதேச சபைக்குரிய வாடி வீடும் படையினரின் பிடியிலேயே இன்றும் கானப்படுவதோடு குரும்பசிட்டி இ வசாவிளான் இ காங்கேசன்துறை ஆகிய மூன்று மைதானங்களும் படையினரின் பிடியிலேயே உள்ளது.

இவ்வாறு எமது சபைக்குரிய கட்டிடம் படையினரின் பிடியில் உள்ள நிலையில் சபையின் இச் செயல்பாடுகளிற்காக நாம் தனியாழ் கட்டிடங்களை வாடகைக்கு அமர்த்தியே பயன்படுத்துகின்றோம். இந்த நிலமையில் வலி. வடக்கில் இடம்பெறும் அபிவிருத்திகள் பல தாமதங்களையும் கண்டுவரும் நிலையில் மிகவும் முக்கிய விடயமான விடுவிக்கப்படும் பிரதேசத்திற்கான மின்சார விநியோகம் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றது.

அதாவது மின்சார சபைக்குரிய அலுவலக வளாகம் படையினரின் பிடியில் உள்ளதனால் மின்சார சபை தமது செயல்பாட்டிற்காகவும் திடீர் சேதம் ஏற்பட்டாலும் 18 கிலோ மீற்றர் பயணித்த தமது சேவையை வழங்குகின்றனர். இதனால் படையின் பிடியில் உள்ள எமது சபையின் 7 இடங்களையும் மின்சார சபையின் இடத்தையும் கண்டிப்பாக விடுவிக்க வேண்டிய தேவை உள்ளது. என்றார்.