பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையின்  தலைமையத்தில் முறைப்பாடு!

breaking
வட தமிழீழம் புதுக்குடியிருப்பில் காவல்துறையின்  சட்ட நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை தலைமையத்தில் முறைப்பாடு
புதுக்குடியிருப்பு 07ஆம் வட்டாரப்பகுதியில் பகுதியில் கடந்த 04.05.18 அன்று காணிப்பிரச்சனை காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது இருவர் காயமடைந்துள்ளார்கள்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரும்  மருத்துவமனை சார்பானவர்களும் இணைந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளமை தொடர்பில் 10.05.18 அன்று மனித உரிமை ஆணைக்குழுவில் பா.பரமேஸ்வரன் முறையிட்டுள்ளார்.
இந்த சம்வத்தில் வெட்டு காயங்களுக்கு உள்ளா பெ.சிறி என்பவர் முல்லைத்தீவ மாவட்ட நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று 14.05.18 அன்று நீதிமன்றினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த அதேவேளை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இன்னிலையில் இந்த வழக்கினை நீதிமன்றம் 30.07.18 அன்று இணக்கசபைக்கு மாற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இன்னிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் இணக்கசபையின் இணக்கப்பாட்டினை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்ற தீர்பினையே விரும்புவதாக ஒப்பம் வைத்து கொடுத்துள்ள நிலையில்.
வெட்டு சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இந்த சம்பவத்தினை காவல்துறை  சிறுகுற்றப்பிரிவில் வழக்காக பதிவுசெய்துள்ளமையின் உண்மை நிலைப்பாட்டினை எடுத்து பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக
பாதிக்கப்பட்ட தரப்பினர் 06.09.18 அன்று கொழும்பில் உள்ள காவல்துறை தலைமைப்பணிமனை சென்று தங்கள் முறைப்பாட்டினை பதிவுசெய்து புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்ட பதிவு நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதை தெரிவித்துள்ளார்கள்.
இவர்களின் இந்த முறைப்பாட்டினை ஏற்று பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியினை பெற்றுக்கொடுப்பதாக கொழும்பில் உள்ள காவல்  தலைமையகம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 20.09.18 அன்று மீண்டு விசாரணைகளை மேற்ககௌ; யாழ்ப்பாணத்தில் உள்ள மனி உரிமை ஆணைக்குழு புதுக்குடியிருப்பு காவல்துறை அதிகாரி,முல்லைத்தீவு உதவி காவல்  அத்தியகட்சகர், புதுக்குடியிருப்பு ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்,முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை பணிப்பாளர் ஆகியோரை ஒரே நாளில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்