காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை.!

breaking
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும்அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்சர்வதேச நாடுகள் காணாமல் போனோர் விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்ததின் போதும் அதற்கு பின்னரானகாலப்பகுதியிலும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கடத்திச்செல்லப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்தமிழர் தாயகப் பிரதேசங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அரசாங்கம் இதுவரை தீர்வுவழங்காத நிலையில் காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நிரந்தர அலுவலகம் ஒன்றை அரசாங்கம் நிறுவியுள்ளதுடன்வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்திய கலந்துரையாடல்களைமையப்படுத்தி இடைக்கால அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான அலுவலகம் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்தும் போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழலில் காணாமல் போன தமது உறவுகள் தமக்கு கிடைப்பதற்குபுலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முல்லைத்தீவுமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ்ஈஸ்வரி தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் எமது உறவுகளை கையளித்ததற்கானநேரடி சாட்சியாக நாம் காணப்படுகின்ற நிலையில், கையளித்த உறவுகளையாவது அரசாங்கம்முதலில் விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்