கடற்கரும்புலி கப்டன் புலிமகள்.!

breaking
அது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன செய்தி ” என்று கேட்டாவது அறிந்து கொள்கின்ற ‘ விடயம் விளங்கிய ‘ சனம் அவ்வூர்ச்சனம். அவள் அந்த மண்ணின் மகள். கூர்ப்பான அம்மக்களின் மகள். அவளும் விடயம் விளங்கியவள்தான். அவளுக்கு எல்லாமே மிகச் சரியாக விளங்கியதால் , தனது பாதையை நேரியதாய் தெரிவு செய்தாள். சுதந்திரப் பறவைகள் மகளிர் அமைப்பு அவ்வூரில் அமைத்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் முதல்வி அவளே. மெழுகுதிரி , ஊதுபத்தி , கார வழலை உற்பத்திகளிலும் சுதந்திரப்பறவைகள் இதழ் விற்பனையிலும் அவள் பங்கு பெரிது. எம்மை ஆழ வந்தவர்களை வீழவைப்பதற்காக தான் ஆயுதம் ஏந்தப்போகின்ற அந்த நாளை அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். இப்போது ஆயுதம் என்தாவிட்டாலும் , அவள் ஒரு புலியே. 1886 நடுப்பகுதியில் தமது ஒருவருட படியிற் பயிற்சியை நிறைவு செய்து , நாடு திரும்பி களநடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது அணியினர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்க , இவளையொத்த ஆயிரத்துக்கும் அதிகமான சுதந்திரப் பறவைகளின் மனங்களில் ஆவல் அலைமோதியது.  ‘ அடுத்தது ந்பாங்கல்தான். ‘ அவளும் அப்படித்தான் நம்பினாள். ஆனால்….. ஆயிரம்பேரையும் ஒருசேர உள்வாங்கும் பலம் அன்றைய சூழலில் எமது அமைப்புக்கு இருக்கவில்லை. நூறு சுதந்திரப்பறவைகள் மட்டும் புறப்பட்டார்கள் ஏனையவர்களிடம் தமது பணிகளை ஒப்படைத்துவிட்டு. ” நாங்கள் பயிற்சி முடித்துவிட்டு வந்து உங்களை மாற்றிவிடும் வரை வேலை செய்துகொண்டிருங்கள். “ என்ற கோரிக்கைக்கு தலையசைத்து வழிவிட்டவர்களில் அவளும் ஒருத்தி. இப்போது அவள் பணி பாரியதாகியது. ஆள் எண்ணிக்கைதான் குறைந்ததேதவிர , பணியின் அளவு குறைவடையவில்லை. கடல் கடந்து ஒரு படை வந்து எம்மண்ணில் கால்பதித்த நாட்களில் அது இன்னமும் கடினமாகியது. விடுத்களைப்புலிகளை அழிக்கவென வந்தவர்கள் , விடுதலைப்புலிகளின் பின்னால் திரண்டுகொண்டிருந்த மாபெரும் மக்கள் சக்தியைப் பார்த்து மலைத்து , அதை அழிக்க முனைந்தபோது தலைமரைவாகியவர்களில் அவளும் ஒருத்தி. வந்த படையினர் அவளின் பெயரை விசாரித்துத் தேடிக்கொண்டிருக்கையில் , அயலூரின் வீடொன்றில் அமைதி முகத்தினளாய் அவளிருந்தாள். நெருப்பு நெஞ்சிலிருந்து. கடல் கடந்துவந்த படைகள் தம் அமைதி முகத்திரையை கிழித்து , புழு நெளிகின்ற புண்கள் நிறைந்த செந்த உருவை வெளிக்காட்டி , பெண் – ஆண் என்ற பேதம் பாராது எம்மீது தம் நிணத்தை சிந்திச் சென்றப்போது , அவளே நெருபானாள். அந்த நெருப்பு ஒரு பெரும் தொலைவுக்கப்பால் , விளாசி ஒருநாள் எரிந்தது. காற்றோடு வந்தது. கடற்கரும்புலி கப்டன் புலிமகள் அது 1998 நடுப்பகுதி. கிளிநொச்சியின் நகரப்பகுதி இராணுவத்திடமிருந்தது.  டிப்போச் சந்தியடி எங்களிடமிருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்ட தமிழீழ காவற்பணிமனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தேவாலயம் , கருணா நிலையம் எல்லாம் எமதும்  சிறீலங்காப் படையினரதும்  காவல் நிலைகளுக்கிடையிலான சூனியப்பகுக்குள் அமைந்திருந்தன. நேர்வீதி. எமது நடமாட்டத்தைப் படையினரும் அவர்களை நாமும் இலகுவாக அவதானித்து , பதுங்கி சூடுகளை தாராளமாக மேற்கொள்ள வசதியான நேர்வீதி. இரு பகுதியுமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மறைப்புப் படங்குகளை வீதிக்குக் குறுக்கே கட்டி தொங்கவிடுவோம். ஒருவரின் படங்கை மற்றவர் எரித்துக்கொண்டுமிருந்தோம். கதிரவன் உதிப்பதும் மறைவதும் போல , படங்கு கட்டுவதும் எரிப்பதும் கூட மாற்றமின்றி நடந்துகொண்டிருந்தது. தேவாலயத்தருகே எம்மவர்கள் இரவிரவாக எரிக்கட்டுகிற படங்கு , படையினரின் அடியில் விடிவதர்க்கிடையிலேயே கிழிந்து விழுந்துவிடும். சில நாட்களாக இது தொடர்ந்தது எங்களுக்குப் பெரிய சவாலாகப் போய்விட்டது. படங்கு எறிந்தால் , அறுந்து விழுந்தால் நடமாடமுடியாது. காப்பரண்களுக்குள்ளேயே சாப்பாடு , தண்ணீர் இல்லாமல் முடங்கவேண்டியதுதான்.   அங்கு நிலைகொண்டிருந்த லெப் கேணல் செல்வியின் கொம்பனிக்கு வேவு பார்ப்பது லெப் தாமராவின் அணி. கப்டன் புலிமகள் அவர்களில் ஒருவர். தாமராவுடன் நெடுஞ்சாலை வேவுக்குப் பெரும்பாலும் இணைந்து போவது புலிமகள்தான். ” படங்கை நான் கட்டிறன் புறப்பட்டால் புலிமகள். வெட்டப்பட்ட உரைப்பைகளை இணைத்துக்கொண்டு தைத்து படங்கு தயாரிக்கப்பட்டது. இரவானதும் படங்கை இழுத்துக்கொண்டு தேவாலயத்தடிக்குப் போனார் புலிமகள். பகலில் படகு எரிந்துபோனதால் , இரவு கட்டாயம் நாம் வருவோம் என்று எதிர்பார்த்திருந்த படையினர் , இருள் சூழ்ந்ததுமே தேவாலயச் சூழலை நோக்கி எறிகணைகளை விசிறத் தொடங்கினர். புலிமகள் படகோடு  பதுங்கிப் பதுங்கி போனார். அதுநேர்வீதி என்பதால் , இரவில் ஒருவர் நின்றால்கூட வானவிளிம்பில் நிழலுருவமாகத் தெரியும். பகலைப் போலவே இரவும் ஆபத்தானதுதான். அச்சத்தைத் தரவல்ல , ஆபத்து நிறைந்த அந்த இரவில் , கல்வாரி மலை நாயகனின்……  மெளன தவத்தைக் குழப்பியவாறு படிர் படிர் என எறிகணைகள் வெடித்து முழங்க , மரத்தில் ஏறிய புலிமகள் படங்கை இழுத்து வரி வரி என்று வரத்து கட்டிவிட்டு , வீதியின் மறுபுறமுள்ள மரத்திலும் இறுக்கி இறுக்கி என இறுக்கிக் கட்டிவிட்டு காயங்கள் எதுவுமின்றி இரவு 9 : 00 மணிக்கே எமது முண்ணரங்குக்கு திரும்பிவிட்டார். காலையில் காற்றிலே படங்கு அசைந்தாடிக்கொண்டிருந்ததை நாங்களும் ஆச்சரியமாகத்தான் பார்த்தோம். நேற்றும் அதற்கும் முதல் நாளும் இவ்வளவு நேரம் வரை படங்கு தாக்கு பிடித்திருக்கவில்லை. அதிகாலையிலேயே அறுந்து விழுந்து எங்களுடைய எல்லா வேலைகளையும் பாழாக்கிவிட்டிருந்தது. இன்று விடிந்த பின்பும் காற்றிலே ஆடிக்கொண்டிருந்தது. படையினர் அடியை பலமாகத் தொடங்கினர். படகிலே ஓட்டைகள் விழுந்தனவேயன்றி , அறுந்து விழவில்லை. அடியோ விடாமல் தொடர்ந்து. கடைசியில் படங்கு அறுந்து விழுந்தபோது மதியம் 12 : 00 மணி கடந்துவிட்டிருந்தது. அதற்குள் நாங்கள் எவ்வளவோ வேலைகளைச் செய்து முடித்துவிட்டிருந்தோம். அன்று புலிமகள் வெற்றிமகளானாள். சில காலங்களின் பின் அவள் கடல்மகளானாள்.  பின்னொரு நாளில் கரும்புலியானவள்…. அன்று…… கடலிலே பகைக் கலமதை , பகைவரை வென்ற மகளும் ஆனாள். நினைவுப்பகிர்வு:- மலைமகள். விடுதலைப்புலிகள் (ஆனி, ஆடி 2004) 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”