நின்று சிரிக்கிறாய் நட்சத்திரமாய்.!

breaking
தீக்குச்சிமுனையாய்த் திரண்டது உனக்குள் தீ பிராந்திய நலனென்ற பெட்டிமுகம் உரச உரச அது பற்றி எரிந்து உன் வயிற்றுள் தொற்றிக் கொண்டது - நீ எல்லோர் முன்னிலையிலும் எரிந்தாய் நிறைவேற்றல் என்கின்ற நீரூற்றி உன் தீயை அணைக்க வேண்டியவர்கள் நீ எரிந்து கருகட்டும் என்று பேரம் என்கின்ற நெய்யூற்றினார்கள். நீ பெருஞ்சுவாலையாய் எரிந்தாய் உன்னை எரித்தவர்கள் இறு மாந்திருந்தார்கள் பின்னாளில் தங்களையும் அது பற்றியெரிக்குமென்று எண்ணியிருக்காமல் உன்னிடம் பற்றிய தீ இன்னமும் எரித்துக் கொண்டேயிருக்கிறது. பல பகை முகங்களை! வெற்றிகளோடு நாம் நிமிர்கின்ற நேரங்களிலெல்லாம் நீள் விசும்பில் நின்று சிரிக்கிறாய் நீ நட்சத்திரமாய் கவியாக்கம் :ஆதிலட்சுமி சிவகுமார்  வெளியீடு :ஈழநாதம் (26.09.2004) மீள் வெளியீடு :தாரகம் இணையம்  முதல் இணைய தட்டச்சு  உரிமை :தாரகம் இணையம்